கிரிப்டோ கரன்சி? கணக்கு தொடங்குவது முதல் முதலீடு வரை! நிபுணரின் விளக்கம்!

கிரிப்டோ கரன்சி? கணக்கு தொடங்குவது முதல் முதலீடு வரை! நிபுணரின் விளக்கம்!

கிரிப்டோ கரன்சி? கணக்கு தொடங்குவது முதல் முதலீடு வரை! நிபுணரின் விளக்கம்!
Published on

இன்றைய தேதிக்கு உலக அளவில் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அதிகம் குவித்து வருவது கிரிப்டோ கரன்சிகளில் தான். இந்த நிலையில் கிரிப்டோ கரன்சியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் வைத்துள்ளதாக ஒரு தகவல் அண்மையில் வெளியாகி இருந்தது. இந்தியர்கள் உட்பட உலக மக்கள் பலரிடமும் இது குறித்த டாக் வைரலாக கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிற வேளையில் கிரிப்டோ கரன்சி குறித்து பார்க்கலாம். 

இதற்காக கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும் விற்கவும் உதவி வரும் எக்ஸ்சேஞ்சரான சென்னையில் செயல்பட்டு வரும் ஜியோட்டஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் அர்ஜூன் விஜய் இடம் பேசினோம். 

கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

நம் கையில் இருக்கும் கரன்சி நோட்டுகளை போல தான் இது. ஆனால் அது டிஜிட்டல் வடிவில் கரன்சிகளாக இருக்கும். இதனை வெர்ச்சுவல் கரன்சி எனவும் சொல்லலாம். ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் அந்த நாட்டில் மட்டுமே செல்லத்தக்கதாகும். ஆனால் இந்த கிரிப்டோ கரன்சிகள் அனைத்து இடங்களிலும் செல்லத்தக்கவை. இதற்கு தேவையானது இணைய இணைப்பு. இதன் மூலம் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளலாம். 

கடந்த 2009 வாக்கில் தான் உலகின் முதல் பிட்காயின் உருவாக்கப்பட்டது. அதனை ‘சடோஷி நகமோடோ’ என்ற புனை பெயரில் ஒருவர் உருவாக்கி இருந்தார். அரசாங்கத்தின் தலையீடு ஏதும் இல்லாமல் கிரிப்டோ கரன்சி மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். பிளாக் செயின் சிஸ்டம் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இவை உருவாக்கப்பட்டவை. இது நாம் பயன்படுத்துகின்ற வங்கி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அப்பாற்பட்டது. 

பிட்காயின், எத்திரியம், ட்ரான், டோஜ், ஷிபா என சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிரிப்டோ கரன்சிகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. தங்கத்தை எப்படி சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கிறார்களோ அது போல ஒவ்வொரு கரன்சிக்குமான ஓப்பன் சோர்ஸ் கோடிங் மூலமாக இந்த கிரிப்டோ கரன்சிகள் MINE செய்யப்படுகின்றன. 

இதை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது எப்படி? 

தனிநபர்கள் தன்னிச்சையாக கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும், விற்கவும் செய்யலாம். அதற்கென ஒரு பிரத்யேக கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த கொடுக்கல் வாங்கலில் நம்பகத்தன்மை மற்றும் சைபர் செக்யூரிட்டி மாதிரியான சிக்கல்களை களைய கிரிப்டோ கரன்சிகளை டிரேட் செய்வதற்கென சில பிளாட்பார்ம்களும் இயங்கி வருகின்றன. இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இந்த தளங்களின் செயல்பாடு உள்ளது. எங்கள் நிறுவனமான ‘ஜியோட்டஸ்’ அந்த பணியை தான் செய்து வருகிறது. 

இதில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

கிரிப்டோ கரன்சியை பொறுத்த வரையில் எதையுமே நிரந்தமானது என்ற எந்தவித உத்தரவாதமும் கொடுக்க முடியாது. இன்றைய தேதிக்கு ஒரு பிட்காயினின் விலை 47,08,920 ரூபாயாக உள்ளது. (இது நவம்பர் 3 அன்று காலை 11.04 மணியளவில் இருந்த விலை) இருந்தாலும் இந்த விலையில் தொடர்ந்து ஏற்றம் இருக்குமா? அல்லது விலை இறங்குமா?என்பதை நிலையாக கணிக்க முடியாது. அதனால் இதில் முதலீடு செய்வதில் ரிஸ்க் கொஞ்சம் அதிகம். ஒவ்வொரு கிரிப்டோ கரன்சியின் காயின்களுக்கும் விலை வேறுபடும். Ether காயினின் விலை 3,41,040 ரூபாயாக உள்ளது. இப்படி ஒவ்வொரு கரன்சிக்கும் விலையில் வேறுபாடு இருக்கும். இதன் விலையை பொறுத்த வரையில் ஒரு குறிபிட்ட அளவு தான் கிரிப்டோ காயின்களை தயாரிக்க முடியும் என்பதால் அதன் டிமென்டுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கும். பிட்காயினை பொறுத்த வரையில் 21 மில்லியன் என வரைமுறை வைத்துள்ளனர். அதனால் அது மட்டும் தான் உலகில் புழக்கத்தில் இருக்கும். 

பெரிய முதலீட்டாளர்கள் இதில் சிறிய அளவில் பரிசோதனை முயற்சியாக முதலீடு செய்யலாம். சிறிய முதலீட்டாளர்கள் எதிர்காலத்தில் இதன் நிலைத் தன்மையை ஆராய்ந்து முதலீடு செய்து கொள்ளலாம். மொத்தமாக முடியவில்லை என்றாலும் நண்பர்கள், குடும்பத்தினர்கள் உடன் இணைந்து பங்கீடு செய்து கொண்டு முதலீடு செய்யலாம். அதே நேரத்தில் இந்த கிரிப்டோ கரன்சி மற்றும் அதன் டிரேட் எப்படி இயங்குகிறது என்பதை அறிந்து கொண்டு அதை செய்வது சிறப்பானது. குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி, கிரிப்டோ கரன்சி செயல்பாட்டுக்கு அனுமதி ஏதும் கொடுக்கவில்லை. இருந்தாலும் வங்கி மூலமாகவே இந்த வர்த்தகத்தில் கிரிப்டோவை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது மாதிரியான நடைமுறைகள் நடக்கின்றன” என தெரிவித்துள்ளார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com