”இங்கு மனிதர்கள் செல்ல தடை”.. பாம்புகளுக்கென்று தனி தீவா?.. இது உலகின் அபாயகரமான பகுதி!

”இங்கு மனிதர்கள் செல்ல தடை”.. பாம்புகளுக்கென்று தனி தீவா?.. இது உலகின் அபாயகரமான பகுதி!
”இங்கு மனிதர்கள் செல்ல தடை”.. பாம்புகளுக்கென்று தனி தீவா?.. இது உலகின் அபாயகரமான பகுதி!

பாம்பென்றால் படையே நடுங்கும், ஆனால், கிராமங்களில் பாம்புகள் விவசாயிகளின் நண்பனாக கருதப்படுகிறது. இவ்வாறு பாம்புகளை பற்றிய பல பேச்சு வழக்குகள் நடைமுறையில் இருந்தாலும், பாம்மென்றால் அனைவருக்கும் பயம்தான்.

பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்ததென்றாலும், இதற்கு முதுகெலும்பு உண்டு. பாம்புகளில் கிட்டத்தட்ட 3600 வகைகள் உள்ளதென்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் நச்சுப்பாம்புகள் சுமார் 600 வகைகள் இருப்பதாக ஆய்வாளார்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 230 வகை பாம்புகள் இருக்கிறது என்றும், இதில் 50 வகையான பாம்புகளுக்கு விஷம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இதில் ஒருசில நச்சுப்பாம்புகள் கடித்தவுடனேயே அதன் நஞ்சு நரம்பு மண்டலத்தைத் தாக்கி, சில நிமிடங்களில் உயிர் போகும் அபாயமும் உண்டு. இவ்வகை நச்சு பாம்புகளில் முக்கியமானது, நாகப்பாம்பு, பவளப்பாம்பு, கட்டுவிரியன் என்பன. இதில் சில பாம்புகளின் நஞ்சு இரத்தக் குழாய்களையும் இரத்த அணுக்களையும் தாக்கி அழித்து இரத்தத்தை உறையவைத்துவிடும். கண்ணாடி விரியன் என்னும் பாம்பு இவ்வகையைச் சேர்ந்ததாகும். சரி, விஷயத்திற்கு வருவோம்.

பாம்புகளுக்கென்று தனித்தீவு உள்ளது என்றால் நம்புவீர்களா? ஆம். பிரேசிலின் சாவோ பாவுலோ மாநிலத்திற்குட்பட்ட ஒரு தீவு உள்ளது. இது கெய்மாதா கிராண்டி தீவு (Ilha da Queimada Grande) அல்லது பாம்புத் தீவு snake island என்கிறார்கள். இன்னும் சரியாக கூறவேண்டும் என்றால், சாவோபவுலோ மாகாண கடற்பரப்பில் இருந்து தோராயமாக 31 கிமீ தொலைவில் இத்தீவு உள்ளது. இத்தீவின் பரப்பளவு சுமார், 43000 சதுர கி.மீ. இங்கு ஒரு அடிக்கு ஒரு பாம்பு இருப்பதாக கூறுகிறார்கள். அடேங்கப்பா....என்கிறீர்களா?

ஆம், இத்தீவு முழுக்க பாம்புகள் மட்டுமே உள்ளது. அதுவும் கொடிய விஷமுள்ள பாம்புகள் அதிகம் இங்கு இருப்பதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். இங்கு மட்டும் இவ்வளவு பாம்பா என்கிறீர்களா? ஆம். ஏனென்றால், இத்தீவில் பாறைகள் அதிகம் உள்ளது. மேலும், இது வெப்பமண்டல பகுதி, ஆகையால், இங்கு வேறு வகையான உயிரினங்கள் எதுவும் இல்லை என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகயால், பாம்புகள் தங்களின் இனத்தை பெருக்கி, தங்களுக்கென்று தனி தீவையே கொண்டிருக்கிறது. அதனால், இப்பாம்புகளால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால் பிரேசில் அரசாங்கம் அத்தீவிற்கு மனிதர்கள் செல்ல தடை விதித்துள்ளது.

முக்கியமாக அங்கு கோல்டன் லாச்ஸ்ஹெட் என்ற ஒரு வகை பாம்பு இருக்கிறதாம். இது, ஜரராகா என்னும் இனத்தை விட ஐந்து மடங்கு சக்தி வாய்ந்த விஷத்தை கொண்டதாம். இத்தகைய பாம்பு இந்த தீவில் மட்டும் தான் இருப்பதாக புட்டாண்டே நிறுவனம் கூறுகிறது. புட்டாண்டே என்னும் இந் நிறுவனம் கோல்டன் லான்ஸ்ஹெட்ஸை குறித்த ஆராய்ச்சிக்காக பிரேசிலால் அமைக்கப்பட்டது.

சரி, நாம் அங்கே சென்று தான் பார்போமே என்றால், இத்தீவிற்குள் நுழைவதற்கு பிரேசில் நாட்டு கடற்படையின் அனுமதி பெற்றிருக்கவேண்டும். அவ்வாறு அனுமதி பெற்று அங்கு சென்று, ஒரு வேளை நம்மை அந்த பாம்புகள் நம்மை கடித்துவிட்டால்? அதற்கான மாற்று மருந்து அத்தீவிலிருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாவோ பாலோவினில் உள்ள புட்டாண்டே என்னும் நிறுவனத்தில் தான் இருக்கிறதாம். அதுவரை நாம் உயிரோடு இருப்போமா என்ன?...

இப்படி, உலகில் பல தீவுகள் இப்படி மனிதர்கள் வாழ தகுதியற்றதாக இருந்தாலும் பாம்புகளின் ஆதிக்கத்தால் மனிதர்கள் வாழ முடியாமல் போன தீவாக இந்த இல்ஹா டா குய்மாடா கிராண்டே இருக்கிறது. .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com