இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானல்: போட்டோ ஆல்பம்
கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலா பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இப்போது கொடைக்கானல் எப்படி இருக்கிறது என்பதை போட்டோ ஆல்பமாக பார்க்கலாம்.
பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள். பரவசப்படுத்த பூத்திருக்கிறோம் பார்த்து ரசிக்க கண்கள் இல்லை (பூக்களின் மைண்ட் வாய்ஸ்)
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்துவரும் கோடை மழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்
கோடை மழையைத் தொடர்ந்து விவசாயத்திற்கு தயாரான விளை நிலங்கள்
ஆள் அரவம் இல்லாத வனப்பகுதியில் ஆர்பரித்துக் கொட்டும் அருவிகள்
சுற்றுலா பயணிகளின் வருகையின்றி வெறிச்சோடிய மோயர் சதுக்கம், பேரிஜம் சாலை, குணாகுகை, பைன் பாரஸ்ட், தூண்பாறை
பனிக்கடல் போல் காட்சியளிக்கும் மன்னவனூர்
ஃபிளேம் மினிவெட் என்று அழைக்கப்படும் நெருப்புக்குயில்கள் மற்றும் அரியவகை மரங்கொத்தி பறவைகள்
வானத்தில் நிகழ்ந்த வர்ண ஜாலம்
எம்.கலீல்ரஹ்மான்
படங்கள்: மகேஷ்ராஜா, ராஜேஸ்