950 சதுரடி 8 லட்சம் ரூபாய் செலவு: பனை மரத்தால் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான மண் வீடு

950 சதுரடி 8 லட்சம் ரூபாய் செலவு: பனை மரத்தால் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான மண் வீடு
950 சதுரடி 8 லட்சம் ரூபாய் செலவு: பனை மரத்தால் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான மண் வீடு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 950 சதுரடியில் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான மண் வீடு பற்றி விரிவாக பார்க்கலாம்.

வித்தியாசமான வீடுகளை தேடிப்போகும் எங்கள் பயணத்தில், பல வித்தியாசமான கட்டுமான முறைகளும், பல வித்தியாசமான கட்டுமான பொருட்களும் எங்களைத் தேடி வந்திருச்கு. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 950 சதுரடியில் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வித்தியாசமான மண் வீடு பற்றி விரிவாக பார்க்கலாம்.

சுவாரஸ்யம் நிறைந்த வித்தியாசமான வீடு:

இந்த வீட்டை பொறுத்தவரை நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு. அதுல, இந்த மண் வீட்டின் நுழைவு வாயிலே பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமா இருக்கு, இதுக்கு எளிதில் வலுக்காத கோட்டாகல் பயன்படுத்தி இருக்காங்க. இதை நுழைவு வாயிலின் முதல் படிக்கு மட்டும் பயன்படுத்தி இருக்காங்க. இந்த வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மரங்களில் 80 சதவீதம் பனை மரங்களை பயன்படுத்தி இருக்காங்க. அதில் புதிய மரங்கள் இல்லை. அனைத்துமே பயன்படுத்தப்பட்ட பழைய மரங்கள்தான்.

விலை குறைந்த பலமான பயன்படுத்தப்பட்ட பழைய பனை மரங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு

இந்த வீட்டின் முற்றத்திற்கு பனை மர தூண்களை பயன்படுத்தி இருக்காங்க. இதனோட விலை வண்டிவாடகை அனைத்து சேர்த்தே 300 ரூபாய்தான். அதேபோல் மேற்கூரைக்குத் தேவையான பிரேம் அனைத்தும் பனை மரத்துல செஞ்சிருக்காங்க. இந்த பனை மரங்கள் பலம் வாய்ந்ததாக இருப்பதோடு விலையும் குறைவாக இருப்பதால் பனை மரங்களை பயன்படுத்தி இருக்காங்க. இந்த பனை மரத்தின் விலை ஒவ்வொரு ஊரைப் பொறுத்து மாறும். உங்கள் ஊரில் விலை மலிவாக கிடைத்தால் பனை மரத்தை தாராளமாக பயன்படுத்திக்கோங்க.

கரையான்களிடம் இருந்து மரத்தை பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள சுண்ணாம்பு பாலம்

மண் சார்ந்த வீடுகளை பொறுத்தவரை கரையான்களின் பிரச்னை நிறைய இருக்கும். இந்த வீடும் மண் சார்ந்த வீடு என்பதால் இந்த வீட்டிலும் கரையான்களின் பிரச்னை அதிகமாக இருக்கும். இந்த கரையான் மண்ணை எதுவும் செய்யாது. ஆனால், மரங்களை பெரிதும் பாதிக்கும். அதனால இந்த வீட்டில் மண் சுவரும் மரத்தால் ஆன மேற்கூரையும் தொட்டிருக்கக் கூடாது என்பதற்காக சுண்ணாம்பு கம்பியுடன் சுண்ணாம்பு கலந்து பாலம் போல் அமைப்பை உருவாக்கி இருக்காங்க. இதன் மூலம் கரையான்களிடம் இருந்து மரங்களை காத்துக் கொள்ளலாம்.

தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஜன்னல்கள்

இந்த வீட்டில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பழைய தேக்கு மரங்களால் ஆன ஜன்னல்களை பயன்படுததி இருக்காங்க. பொதுவாக மண்சார்ந்த மற்றும் இயற்கையோட தொடர்புடைய வீடுகளை கட்டும்போது பழைய மர சாமான்களை பயன்படுத்தி கட்டலாம் என்று சொல்வதை உண்மையென நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் மூங்கில் மரத்தால் ஆன கொசு வலை அமைப்புடன் கூடிய கட்டில்களை போட்டிருக்காங்க. அதற்கு மேல் பெட் போட்டிருக்காங்க. இது பார்ப்பதற்கு பிராண்டட் கட்டில் போலவே காட்சியளிக்கிறது.

வேம்பு மரத்தால் ஆன மெயின் டோர்

இந்த வீட்டோட மெயின் டோர் வேம்பு மரத்தால் செய்யப்பட்டது என்று சொன்னாங்க. இந்த வீடு இருக்கும் பகுதிகளில் வேம்பு மற்றும் வேல மரங்கள் அதிகமாக கிடைப்பதால் வேம்பு மரத்தை பயன்படுததியதாகவும் விலையும் குறைவு என்று சொன்னாங்க. நாம வீடுகட்ட என்ன பொருளை பயன்படுத்துறோமோ அது நம இருக்குற பகுதியில கெட்சதுன்னா விலையும் குறைவா இருக்கும் என்பதற்கு இதை ஒரு எடுத்துக்காட்டா எடுத்துக்கலாம்.

எங்க நெலத்துல இருந்தே இடு பொருட்களை எடுத்து நாங்க இந்த மண் வீட்ட கட்டியிருக்கோம். இந்த மண் வீட்டை கட்ட எந்த ஒரு பொருட்களுக்காகவும், நாங்க ரசாயன பொருட்களையோ, செயற்கையாக வெளியே தயாரிக்கப்பட்ட பொருட்களையோ நாங்க வாங்கல. முழுக்க முழுக்க அடித்தளத்துல இருந்து கூரை வரைக்கும் எல்லா வகையான பொருட்களும் எங்களுக்கு பக்கத்துல கெடைக்கிற பொருட்களை வெச்சு நாங்க இந்த வீட்ட முழுமையா கட்டி முடுச்சுட்டோம். இந்த வீட்டுக்கு பயன்படுத்துன அத்தனை மரச்சாமான்களும் பயன்படுத்திய மர சாமான்களையே மீண்டும் பயன்படுத்தி இருக்கோம். இதுக்கு காரணம் இந்த வீட்டை கட்ட புதுசா எந்த ஒரு மரத்தை வெட்ட வேண்டாம் என்பதற்காக தான் என்றார் இந்த வீட்டின் உரிமையாளரும் இயற்கை விவசாயியான ராஜேந்திரன்.

சுவர் எழுப்ப பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என்னென்ன?

இந்த வீட்டுக்கான சுவரை எழுப்ப சல்லி மண்ணை பயன்படுத்தி இருக்காங்க. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய கொங்கு மண்டலங்களில் இந்த சல்லி மண் அதிக அளவில் கிடைப்பதால் இந்த மண்ணை பயன்படுத்தி இருக்காங்க. மற்ற மண்ணுக்கும் இந்த சல்லி மண்ணுக்கும் இருக்குற வித்தியாசம் என்னன்னா, மற்ற மண்ணை விட சல்லி மண்ணில் உறுதி தன்மை அதிகமாக இருக்கும், இந்த சல்லி மண்ணில் ஓடைகல் என்ற சுண்ணாம்பு கல் இருப்பதால் இயற்கையாகவே இந்த சல்லி மண் உறுதி தன்மையுடன் இருக்கும். அதனால சல்லி மண்ணை பயன்படுத்தி சுவரை எழுப்பியிருக்காங்க. இதையடுத்து சுவர் எழுப்பிய பிறகு அதன் மேற்பூச்சிற்காக நன்கு சளித்த சல்லி மண்ணை தண்ணீரில் கரைத்து பிரஸ் மூலம் சுவரின் மேலே அடிச்சிருக்காங்க.

கருங்கல்லால் ஆன அஸ்திவாரம்:

இந்த வீட்டை கட்ட கருங்கல்லால் ஆனா அஸ்திவாரம் அமைத்து அதற்கு மேல் பீம் போடாமல் நேரடியாக அஸ்திவாரத்தின் மேலிருந்து தயார்படுத்திய சல்லி மண்ணால் சுவரை எழுப்பியிருக்காங்க. மண் வீடு கட்டும்போது மண் சுவரை ஒரு நாளைக்கு ஒரு அடிதான் கட்ட முடியும். அப்படி கட்டப்படும் சுவர் காய்ந்த பிறகே அதன் மேல் மீண்டும் சுவரை எழுப்பத் தொடங்குவார்கள். இது மண்வீடு கட்டும்போது இருக்கும் குறை என்றே சொல்லலாம். அதேபோல் இந்த சுவரின் அகலம் 18 இன்ச் இருக்கு, சாதாரணமாக செங்கல் சுவர் எழுப்பும் போது அதன் அகலம் 9 இன்ச் மட்டுமே இருக்கும். மண் சுவரின் தடிமன் அதிகமாக இருப்பதால் வெளியே இருப்பதை விட வீட்டினுள் வெப்பம் குறைவாக இருக்கும்.

இந்த பகுதியில் கிடைக்கும் ஓடக்கல் வஜ்ரம் பயன்படுத்தி தரைத்தளம் அமைத்திருக்கோம். கிட்டத்தட்ட கடந்த 30 வருடங்களாக இந்த முறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அதையும் இந்த வீட்டில் மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கோம். அப்படி பயன்படுத்தி பார்த்தபோது அதனுடைய ரிசல்ட்டும் சிறப்பாக இருக்கிறது. என்றார் மகிழ் பில்டர்ஸ் அரவிந் மனோகரன்.


கனமான மற்றும் ஸ்டாராங்கான சிலாப்கள்

சமையறையில் அமைக்கப்பட்டுள்ள மட் அவன், பாரம்பரியத்துடன் பார்ப்பதற்கு அழகாக கட்சியளித்தது. விறகால் இயக்கப்படும் இந்த அடுப்பில் கேக்குகள் செய்திருப்பதாக சொன்னார்கள், அதேபோல் நல்ல கனமான கடப்பா கல்லை வெச்சு சிலாப் அமைச்சிருக்காங்க. சுவர் எழுப்பும்போதே சிலாப் வைத்து அதன் பிறகே மேலும் சுவர் எழுப்பியிருக்காங்க. இதனால் பணமும் நேரமும் மிச்சமாகிறது. அதேபோல் அடுப்புக்கு மேலே பறக்கும் பாலம்போல சிலாப் அமைச்சிருக்காங்க. இந்த சிலாப் சுவற்றில் கிட்டத்தட்ட ஒரு அடி உள்ளே இருப்பதால் மிகவும் வலிமையான சிலாப்பாக காணப்படுகிறது. புகை போக்கியுடன் கூடிய புகையில்லை அடுப்பும் கட்டியிருக்காங்க.

வித்தியாசமான முறையின் அமைக்கப்பட்டுள்ள சுடுநீர் கலனுடன் அமைந்துள்ள ரெஸ்ட் ரூம்

இந்த வீட்டில் பெயிண்ட் பயன்படுத்தப்படவில்லை. புனை மரத்திற்கு மட்டும் முந்திரி எண்ணெய் அடுச்சிருக்காங்க. அதனால் மர பொருட்களை பார்க்கும்போது பளபளவென தெரிகிறது. இந்த வீட்டோ ரெஸ்ட் ரூம், தனியாக கட்டப்பட்டுள்ளது. ரெஸ்ட் ரூமோட தரைதளத்திற்கு கோட்டகல் பயன்படுத்தி இருக்காங்க. இந்த ரெஸ்ட் ரூமோட முக்கியமான விசயம், ஒரு மூலையில் அமைக்கப்பட்டுள்ள சுடுதண்ணி கலன் (வாட்டர் ஹீட்டர்) இதற்கு விறகு போடுவதற்காக வெளிப்புறம் ஒரு வழி இருக்கு அதன் மூலம் விறகை போட்டு தண்ணீரை சூடாக்கி பயன்படுத்தலாம். இதற்கென பிரத்யேகமாக புகை போக்கியும் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய விசயங்கள் நிறைந்து காட்டப்பட்ட மண் வீடு

இயற்கை சார்ந்த இந்த வீட்டில் பழைய விசயங்கள் நிறைய இருக்கு. ஆனால், பார்ப்பதற்கு நமக்கு புதுசா இருக்கு. ஏன்னா இதையெல்லாம் இப்பதான் நாம் முதன் முறையாக பாக்குறோம். இந்த வீட்டை கட்ட மெட்டீரியல் வாங்கிய தொகையை விட கூலிதான் அதிகமாக இருந்தது. இந்த வீட்டுக்குள்ள வந்துட்டா வெப்பநிலை மாற்றத்தை கண்டிப்பா நாம உணரமுடியும், வெளிய எவ்வளவு வெயில் அடுச்சாலும் வீட்டுக்குள்ள வந்துட்டா குளு குளுன்னு இருக்கும். அதேபோல மழை காலத்துல வெது வெதுப்பா இருக்கும். இதுபோன்ற மற்றொரு வீட்டின் விபரங்களுடன் மீண்டும் சந்திப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com