ஒரு லட்சம் நிவாரணம் தந்தும் பரிதவிக்கும் குடும்பங்கள்

ஒரு லட்சம் நிவாரணம் தந்தும் பரிதவிக்கும் குடும்பங்கள்
ஒரு லட்சம் நிவாரணம் தந்தும் பரிதவிக்கும் குடும்பங்கள்

கோவை சுந்தராபுரம் பகுதியில் சொகுசு கார் மோதியதில், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஏற்கெனவே வறுமையில் வாடி வரும் நிலையில் இந்த உயிரிழப்புகள் அவர்களது குடும்பத்திற்கு மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் கோவை சுந்தராபுரம் சொகுசு கார் விபத்து. அதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் அனைத்தும் வாடகை வீட்டில் வறுமையில் நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்கள். குறிப்பாக நாகராஜனுக்கு திருமணமாகி முதலில் பிறந்த ஆண் குழந்தை இறக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பல்வேறு பிரார்த்தனைகளை தாண்டி பிறந்தவர்தான் சுபாஷினி. பத்தொன்பது வயதான சுபாஷினியை வறுமையில் இருந்தாலும் பாசத்துடன் நன்கு படிக்க வைத்தனர். சுபாஷினியை அவர் விரும்பும் பள்ளி, கல்லூரி என கடன் வாங்கி படிக்க வைத்தார். அந்தமகளை தன கண் முன்னே விபத்தில் பறிக்கொடுத்தார் நாகராஜ்.  ‘என் மகளை மீண்டும் யார் எனக்கு தருவார்கள்?’ என கண்ணீர் வழிய நியாயம் கேட்கிறார் இந்தத் தகப்பன்.

லோடு மேனாக இருந்து தனது மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து தனது இரண்டு மகன்களில் ஒரு மகன் மனநலம் பாதித்திருந்த நிலையில் தனது குடும்பத்திற்காக உழைத்து வந்த ஸ்ரீரங்கதாஸூம் தனது இன்னுயிரை இந்த விபத்தில் இழந்து விட்டார். இதனால்  இவரை நம்பியிருந்த குடும்பத்திற்கும் மட்டுமல்லாமல் உயிரிழந்த நபர்களின் பிற குடும்பங்களுக்கும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்கி உதவ வேண்டும்  என்கிறார் ரங்கதாஸின் உறவினர் ஜெகதீசன்.

சாலையோரத்தில் பூக்கடை நடத்தி அரசுப்பள்ளியில் பயின்று வரும் தனது மகனை நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசையோடு உழைத்த வந்தவர் அம்சவேணி. மகன், உடல்நலம் குன்றிய கணவர், மாமனார், மாமியார் என தனது குடும்பத்தையே பூ விற்று மருத்துவம் பார்த்து வந்தார். அம்சவேணியின் இழப்பு அவரது குடும்பத்தை உருக்குலைய வைத்துள்ளது என்கிறார் அவரது சகோதரி வாரகாம்பாள்.

இதேபோன்றுதான் ரேசன் கடைக்கு போகும் வழியில் விபத்துக்குள்ளான நாராயணன், குப்பாத்தாள், ருக்குமணி ஆகியோரின் குடும்பங்களும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தற்போது விபத்து நடந்த பகுதியில் தடுப்புகளை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வரும் காவல்துறை முன்னதாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததால் இந்த ஆறு உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் எனத் தெரிவிக்கும் குடும்பத்தினர் ஒருலட்சம் என  அறிவித்துள்ள நிவாரண தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

தகவல்கள் : சுரேஷ்குமார் - செய்தியாளர், கோவை 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com