5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு: பாஜகவின் நிலை என்ன?

5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு: பாஜகவின் நிலை என்ன?
5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு: பாஜகவின் நிலை என்ன?

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெறவும், பஞ்சாபில் தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்புள்ளதாக ஏபிபி சி-வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

இந்த தேர்தல் மூலமாக ஆம் ஆத்மி கட்சி வட மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி கடுமையாக பாதிக்கும் என்றும் கடந்த மாதம் நடந்த ஏபிபி-சி வோட்டரின் முதல் சுற்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேசம்:

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக 41.3 சதவீத வாக்குகளைப் பெறும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 32 சதவீதம், பகுஜன் சமாஜ் கட்சி 15 சதவீதம், காங்கிரஸ் 6 சதவீதம், மற்றவர்கள் 6 சதவீத வாக்குகளை பெறுவார்கள் என கணித்துள்ளது. கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக  41.4 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதே வாக்குகளை பாஜக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. மொத்தமுள்ள 403 சட்டமன்ற உறுப்பினர்களில் பாஜக 241 முதல் 249 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது என்றும் சமாஜ்வாடி கட்சி 130 முதல் 138 இடங்களைப் பெறும் என்றும், பகுஜன் சமாஜ் 15 முதல் 19 இடங்கள் வரையிலும், காங்கிரஸ் 3 முதல் 7 இடங்களும் பெறலாம் எனவும் கணித்துள்ளது.

பஞ்சாப்:

பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். பஞ்சாபில் மொத்தமுள்ள 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 36 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 32 சதவீத வாக்குகளையும், ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) 22 சதவீதத்தையும், பாஜக 4 சதவீதத்தையும் மற்றவர்கள் 6 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளது. இடங்களைப் பொறுத்தவரை, ஆம் ஆத்மி 49 முதல் 55 இடங்கள், காங்கிரஸ் 30 முதல் 47 இடங்கள், அகாலி தளம் 17 முதல் 25 இடங்கள், பாஜக 0-1 இடங்களை பெறலாம் என கணித்துள்ளது.

உத்தரகாண்ட்:

உத்தரகாண்ட் தேர்தலில் காங்கிரஸ் 34 சதவீதமும், பாஜக 45 சதவீதமும், ஆம் ஆத்மி 15 சதவீதமும், மற்றவர்கள் 6 சதவீத வாக்குகளையும் பெறலாம். மொத்த 70 உறுப்பினர்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி 21-25 இடங்களையும், பாஜக 42-46 இடங்களையும், ஆம் ஆத்மி 0-4 இடங்களையும் மற்றவர்கள் 0-2 இடங்களையும் பெற வாய்ப்புள்ளது

கோவா:

40 உறுப்பினர்களைக் கொண்ட  கோவா சட்டசபையில் அதிகபட்ச எண்ணிக்கையிலான இடங்களுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணித்துள்ளது. கோவாவில் பாஜக 24 முதல் 28 இடங்களையும், காங்கிரஸ் 1 முதல் 5 இடங்களையும், ஆம் ஆத்மி 3 முதல் 7 இடங்களையும் மற்றவர்கள் 4 முதல் 8 இடங்களையும் பெறும் என கணித்துள்ளது. பாஜக 38 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 18 சதவீதத்தையும், ஆம் ஆத்மி 23 சதவீதத்தையும் மற்றவர்கள் 21 சதவீத வாக்குகளையும் பெறலாம். கடந்த சட்டசபை தேர்தலில் கோவாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர்:

40 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டசபையில் பாஜக 21 முதல் 25 இடங்களையும், காங்கிரஸ் 18 முதல் 22 இடங்களையும், நாகா மக்கள் முன்னணி (NPF) 4 முதல் 8 இடங்களையும் மற்றவர்கள் 1 முதல் 5 இடங்களையும் பெறலாம். மணிப்பூர் தேர்தலில் பாஜக 36 சதவீத வாக்குகளைப் பெறலாம். காங்கிரஸ் 34 சதவிகிதம், என்பிஎஃப் 9 சதவிகிதம் மற்றும் மற்றவர்கள் 21 சதவிகிதம் வாக்குகளைப் பெறலாம் என கணித்துள்ளது. இதனால் மணிப்பூரில் ஆட்சியமைக்கவும் இழுபறி உருவாகலாம் என கணித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com