மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்

மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்

மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
Published on

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 2013 ஆம் ஆண்டுடன் ஓய்வுப் பெற்றார் சச்சின் டெண்டுல்கர். ஆனால் ஓய்வுப் பெற்றாலும் அவருடைய ரசிகர்கள் சச்சினின் மற்ற முடியாத ஆட்டங்களை சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பகிர்ந்தும், நினைவுக் கூறியும் வருகின்றனர். அப்படித்தான் ஏப்ரல் 22 ஆம் தேதி இதே நாளில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் ஆடிய "கிளாஸ்  இன்னிங்ஸை" இன்று நினைவுக் கூறியுள்ளனர். 

1998 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் கோகோ கோலா கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்றன. இந்திய அணி, நியூஸிலாந்தைவிட சிறந்த ரன் ரேட்டை பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவுடன் மோதியது, ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பகலிரவுப் போட்டியில் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 285 ரன்களை குவித்தது. 50 ஓவர்களில் 286 ரன்களை எடுத்தால், இந்தியா வெற்றிபெறும்.

இந்திய அணியி்ன் தொடக்க ஆட்டக்காரர்களாக சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினர். கங்குலி 17 ரன்களில் ஆட்டமிழக்க, சச்சின் ஒரு பக்கம் நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினார். ஆனால் அடுத்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா, பொறுமையாக சச்சினுக்கு நிறைய ஆட வாய்ப்புக் கொடுத்தார். அதனை பயன்படுத்திய சச்சின், ஆஸியின் காஸ்ப்ரோவிச், டாமியன் பிளமிங், டாம் மூடி, ஷேன் வார்னே பந்துகளை விரட்டி விரட்டி சிக்ஸ்க்கு பறக்கவிட்டார். இந்த சிக்ஸர்கள் புயல் ஷார்ஜா பாலைவனத்தையும் விட்டு வைக்கவில்லை, ஆட்டத்தின் நடுவே பாலைவனப் புயல் வீசியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 

பின்னர், புயல் ஓய்ந்து ஆட்டம் 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றாலும், 237 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா அவ்வளவு ரன்களை எட்டாது என ஆஸ்திரேலியர்கள் நினைத்த வேளையில், பாலை வனம் புயலை விஞ்சும் வகையில் புயல் வேகத்தில் ஆடினார் சச்சின். பாரபட்சம் இல்லாமல் அப்போதைய ஆஸி அணியின் புகழ்ப்பெற்ற பவுலர்களின் பந்துவீச்சை வெளுத்த வங்கிய சச்சின், 131 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவிக்க, இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனையடுத்து, ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 273 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சச்சின் இந்தப் போட்டியிலும் சச்சின் புயல் ஆட்டம் தொடர்ந்தது, இறுதியில் சச்சின் 134 ரன்களுக்கு ஆட்டமிழக்க. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஷார்ஜாவில் வீசிய மணல் புயல், சச்சினின் அதிரடி புயலில் காணாமல் போனது. இறுதிப் போட்டி அன்றுதான் சச்சினுக்கு பிறந்தநாள். அதனால் ஷார்ஜா கோப்பை சச்சினின் பிறந்த நாள் பரிசாகவும் அமைந்தது. இந்தத் தொடரில் தொடர்நாயகன் பரிசாக சச்சினுக்கு ஓபல் ஆஸ்ட்ரா கார் பரிசாக வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com