தெலங்கானா : கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்யும் 16 வயது சிறுமி

தெலங்கானா : கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்யும் 16 வயது சிறுமி
தெலங்கானா : கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்யும் 16 வயது சிறுமி

தெலங்கானாவை சேர்ந்த 16 வயது சிறுமியான தேவிஸ்ரீ, கொரோனாவால் பாதித்து உயிரிழந்த ஆதரவற்றோருக்கு இறுதி சடங்குகளை செய்கிறார். இவர்கள் குழு இதுவரை 30 பேரை நல்லடக்கம் செய்திருக்கிறார்கள்.

தெலங்கானா மாநிலம் கம்மத்தை சேர்ந்த அன்னம் சேவா அறக்கட்டளை, கோவிட்-19 ல் இறந்தவர்களுக்கு இறுதி சடங்குகளை கண்ணியமாக நடத்தி வருகிறது. இந்த சேவையை அறக்கட்டளை உறுப்பினர்களான தைலம் சரஸ்வதி, பி ஈஸ்வரம்மா மற்றும் பத்துலா தேவிஸ்ரீ ஆகிய மூன்று பெண்கள் செய்கின்றனர். இதில் தேவிஸ்ரீ 16 வயது சிறுமி என்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இவர்கள் கொரோனா பாதித்து இறந்தவர்களின் இறுதி சடங்குகளை நடத்துவது மட்டுமின்றி ஆதரவற்றோர் உடல்களையும் அடக்கம் செய்கின்றனர். தேவிஸ்ரீ மற்றும் இந்த குழுவினர் இதுவரை கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் 30 பேரின் உடலை அடக்கம் செய்திருக்கிறார். "பெண்கள் இப்போது எல்லா இடங்களிலும் தங்கள் திறன்களைக் காட்டுகிறார்கள், நான் இங்கே எனது சிறிய பங்களிப்பை செய்கிறேன்" என்று தேவிஸ்ரீ கூறினார்.

தேவிஸ்ரீயின் பெற்றோர்கள் சமையல் பணியாளர்களாக உள்ளனர். இதுபற்றி கூறும் அவர்  “எனது பெற்றோர், புவனேஸ்வரி மற்றும் ராமு, மற்றும் மூத்த சகோதரர் ஜெய பிரகாஷ் ஆகியோர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள், அதை ஒருபோதும் இதை எதிர்க்கவில்லை. மாறாக மிகவும் ஊக்கப்படுத்துகிறார்கள். இந்த சமுதாயத்திற்கு சேவை செய்வது மிகவும் திருப்தி அளிக்கிறது. எனது படிப்பை தொடர்ந்தபடியே இந்த சேவையையும் செய்வேன்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com