”எங்கள் வறுமையை போக்கும்”-துப்புரவு பணியாளர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்; லாட்டரியில் கிடைத்த ரூ.10 கோடி

ஒரு லாட்டரியின் விலையானது 250 ரூபாயாக இருந்ததால், தன்னால் அந்த தொகையைக் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாத நிலையில், தன்னுடன் பணிபுரியும், 10 பெண்களை கூட்டாக இணைத்துக்கொண்டு ஒரு லாட்டரி சீட்டினை வாங்கி இருக்கிறார்.
லாட்டரியில் பரிசு பெற்ற பெண்கள்
லாட்டரியில் பரிசு பெற்ற பெண்கள்NGMPC22 - 168

கோழிக்கோடு மலப்புரம் பரப்பனங்காடி பேரூராட்சியில் உள்ள ஹரித கர்ம சேனாவைச் (எச்கேஎஸ்) சேர்ந்த துப்புரவு பணியாளர் பெண்கள் 11 பேர் இணைந்து ஒரு லாட்டரி சீட்டை வாங்கி இருக்கின்றனர். அதில் அவர்களுக்கு ரூபாய் 10 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது.

மலப்புரத்தை அடுத்த பரப்பனங்காடில் உள்ள ஹரித கர்ம சேனாவில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து மக்காத குப்பைகளைச் சேகரித்து அழித்து வரும் பணியினை செய்து வருகிறார்கள். இதில், ஒருவர் தான் பார்வதி , இவருக்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கும் ஆசை வந்துள்ளது. ஒரு லாட்டரியின் விலையானது 250 ரூபாயாக இருந்ததால், தன்னால் அந்த தொகையைக் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாத நிலையில், தன்னுடன் பணிபுரியும், 10 பெண்களை கூட்டாக இணைத்துக்கொண்டு ஒரு லாட்டரி சீட்டினை வாங்கி இருக்கிறார்.

ஆனால், அதில் பரிசு விழும் என்று நினைக்காத நிலையில், எதிர்பாராத விதமாக அவர்கள் வாங்கியிருந்த லாட்டரியில் 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதில் மகிழ்சியடைந்த பெண்கள் 11 பேரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் லாட்டரி சீட்டை கொடுத்து பரிசு விழுந்த தொகையை தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர்.

மேலும், இது பற்றி அவர்கள் கூறுகையில், ”இந்தப் பணம் எங்களின் வறுமையை போக்கினாலும் நாங்கள் தொடர்ந்து எங்கள் பணியினை செய்து வருவோம்” என்று கூறியுள்ளனர்.

வறுமையில் வாடும் இப்பெண்களுக்கு இந்த பணம் முக்கியமான ஒன்று, இவர்கள் அனைவரும் நேர்மையாக உள்ளதால், அதற்கான பரிசு இது” என்று, நகராட்சித் தலைவர் உஸ்மான் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com