\
”பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை விட 'பெட்டர் சாய்ஸ்' இருக்கவே வாய்ப்பில்லை” : குஷ்பு

”பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை விட 'பெட்டர் சாய்ஸ்' இருக்கவே வாய்ப்பில்லை” : குஷ்பு

”பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை விட 'பெட்டர் சாய்ஸ்' இருக்கவே வாய்ப்பில்லை” : குஷ்பு
Published on: 

தமிழக பாஜகவின் புதிய தலைவர் ஆகியிருக்கிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜக துணைத் தலைவருமான அண்ணாமலை. இதுகுறித்து, நடிகை குஷ்புவிடம் தொடர்புகொண்டு பேசினோம்,

இளம் வயதிலேயே அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? 

”இளம் வயதிலேயே பதவி கொடுத்ததில் என்ன தவறு இருக்கிறது? பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலையை விட பெட்டர் சாய்ஸ் இருக்கவே வாய்ப்பில்லை.  அண்ணாமலை ஐபிஎஸ் ஆக பணியாற்றியவர். நன்கு படித்தவர். எல்லா சட்டங்களும் தெரிந்தவர். கடின உழைப்பாளி. எதுவாக இருந்தாலும் நேரடியாக சொல்லிவிடுவார். அவரை தலைவராக நியமித்ததில் நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்”.

அண்ணாமலைக்கு பதவி கொடுத்ததால் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறதே?

”அவருக்கு தலைவர் பதவி கொடுத்ததில் யாருக்கும் எந்த அதிருப்தியும் கிடையாது. அப்படி எதுவுமே இல்லை”.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com