"காற்று மாசுபாட்டினால் அதிகரிக்கும் மனநோய் ஆபத்து" - எச்சரிக்கும் புதிய ஆய்வு

"காற்று மாசுபாட்டினால் அதிகரிக்கும் மனநோய் ஆபத்து" - எச்சரிக்கும் புதிய ஆய்வு

"காற்று மாசுபாட்டினால் அதிகரிக்கும் மனநோய் ஆபத்து" - எச்சரிக்கும் புதிய ஆய்வு
Published on

காற்று மாசுபாடு தீவிரமடைவதன் காரணமாக ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன அழுத்தம் போன்ற தீவிர மனநலப் பிரச்னைகளின் அபாயம் அதிகரிக்கும் என்று இங்கிலாந்தில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரியில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு லண்டனில் உள்ள 13,000 பங்கேற்பாளர்களை கொண்டு நடத்தப்பட்டது. மனநல ஆரோக்கியத்தில் காற்று மாசுபாடு மோசமான தாக்கத்தை உருவாக்குகிறது என கடந்த காலங்களில் பல விஞ்ஞானிகள் கூறியதை இந்த ஆய்வு மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த ஆய்வு பற்றிய முக்கிய விவரங்கள்:

  • இந்த ஆய்வுக்கு 15 வயதுக்கு மேற்பட்ட 13,887 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 2008 மற்றும் 2012ஆம் ஆண்டுக்கு இடையில் மனநோய் மற்றும் மனநிலை பிரச்னைகள் உள்ளவர்களை இந்த ஆய்வுக்காக NHS (தேசிய சுகாதார சேவைகள்) ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்தனர்.
  • இந்த பங்கேற்பாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் உள்ள காற்று மாசுபாட்டின் அளவு, குறிப்பாக நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) மற்றும் துகள்கள் (PM2.5 மற்றும் PM10) ஆகியவற்றின் அளவுகள் பதிவு செய்யப்பட்டது.
  • ஆய்வில் பங்கேற்றவர்களின் மருத்துவமனை அனுமதி மற்றும் அவர்களின் உடல்நிலை மாறுபாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டவை:

  • ஆய்வில் அதிக ஆபத்து காற்றில் உள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) மூலமாக ஏற்படுவது கண்டறியப்பட்டது.
  • காற்றில் உருவாகும் நைட்ரஜன் டை ஆக்சைடின் (NO2) ஒரு சிறிய வெளிப்பாடு கூட, ஒரு வருடத்திற்கு பிறகு மனநல பிரச்னைகளை உருவாக்கும். காற்றில் உள்ள நைட்ரஜன் டை ஆக்சைடு மனநல நோயாளிகளின் ஆபத்தில் 32 சதவிகிதம் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இது நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை 18 சதவிகிதம் அதிகரிக்கிறது என்றும் அவர்கள் கணித்தனர்.
  • பிஎம்5 மாசுபாடு காரணமாக மனநல பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கபடுவது 11 சதவிகிதம் அதிகரிக்கிறது. மேலும் இது சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை 7 சதவிகிதம் அதிகரிக்கிறது என்று கண்டறிந்தனர்.

இந்த ஆய்வுகள் ஏன் முக்கியம்?

  • சமீபத்திய ஆண்டுகளில், நமது உடல்நலத்தின் பல்வேறு அம்சங்களில் காற்று மாசுபாடு பல்வேறு தாக்கங்களை உருவாக்குகிறது. மேலும் ஒவ்வொரு ஆய்விலும் காற்று மாசுபாட்டுக்கும், மனநலன் பாதிப்புக்குமான இணைப்பு வலுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • இந்த குறிப்பிட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்களின் நோக்கம், மனநல ஆரோக்கியம் மற்றும் காற்று மாசுபாட்டின் இணைப்பை நிறுவுவது மட்டும் அல்ல. இது இரண்டுக்குமான தொடர்பு "உயிரியல் ரீதியாக சாத்தியமானது" என்பதை நிறுவுவதாகும்.
  • இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்கள், இந்த கண்டுபிடிப்புகள் வளர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான நகரங்களுக்கு பொருந்தும் என்றும், அனைத்து நாடுகளும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகின்றனர்.
  • உலகப் பொருளாதாரத்திற்கு காற்று மாசுபாடு குறித்து மதிப்பீடு செய்யும் போது, அதில் மனநலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்த கொள்கை வகுப்பாளர்களை இந்த ஆய்வு தூண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com