கோடியக்கரையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

கோடியக்கரையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
கோடியக்கரையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்றும் நாளையும் இரு நாட்கள் நடைபெறுகிறது.

சரணாலயத்தில் விலங்குகள் கணக்கெடுப்பு பணியை கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான்  துவக்கி வைத்தார். கணக்கெடுப்பு பணியில் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவ, மாணவிகள், 20 பேர் வனத்துறையினர் 20 பேர் என 40 பேர் ஈடுபட்டுள்ளனர்.

காட்டில் உள்ள புள்ளிமான்கள், வெளிமான்கள், காட்டுக்குதிரைகள், குரங்குகள், பன்றிகள், நரி, காட்டுப்பூனை, முயல்கள், உடும்புகள், உள்ளிட்ட 16 வகையான வனவிலங்குகள் மற்றும் அவற்றின் தடயங்கள், கழிவுகள், ஒலி எழுப்புதல் மூலம் விலங்குகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

சுமார் 30 சதுர கிமி அளவில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் 14 பிரிவாக வழித்தடங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் வனத்துறை வழிகாட்டியுடன் மாணவ, மாணவிகள் விலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com