\
அரசு தேயிலைத் தோட்ட அலுவலகத்திற்குள் புகுந்து கோப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

அரசு தேயிலைத் தோட்ட அலுவலகத்திற்குள் புகுந்து கோப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

அரசு தேயிலைத் தோட்ட அலுவலகத்திற்குள் புகுந்து கோப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
Published on: 

அரசு தேயிலைத் தோட்ட அலுவலகத்திற்குள் புகுந்து உள்ளே இருந்த கோப்புகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குடோன் பகுதியில் அரசு தேயிலைத் தோட்ட கழக அலுவலகம் உள்ளது. இந்த பகுதிக்கு நேற்று இரவு வந்த 14 காட்டு யானைகள் அலுவலகத்தின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது. தொடர்ந்து உள்ளே சென்ற யானைகள் அலுவலகத்தின் உள்ளே இருந்த பல்வேறு கோப்புகளை வெளியே போட்டு கால்களால் மிதித்து சேதப்படுத்தியுள்ளது.

அதேபோல படந்தொரை பகுதியில் முகாமிட்டுள்ள அரிசி ராஜா யானை, அங்குள்ள பழங்குடியினரின் ஒரு வீட்டை உடைத்து சேதப்படுத்தி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே ஊருக்குள் வரும் காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இரவு நேரங்களை கழித்து வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com