முதன்முறையாக 'நீலக்கொடி' சூழல் லேபிளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 8 இந்திய கடற்கரைகள்.!

முதன்முறையாக 'நீலக்கொடி' சூழல் லேபிளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 8 இந்திய கடற்கரைகள்.!
முதன்முறையாக 'நீலக்கொடி' சூழல் லேபிளுக்கு பரிந்துரைக்கப்பட்ட 8 இந்திய கடற்கரைகள்.!

சர்வதேச சுற்றுச்சூழல் லேபிள், நீலக்கொடி சான்றிதழ் பெற முதல் முறையாக எட்டு இந்திய கடற்கரைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன, இந்த கடற்கரைகள் தூய்மையான கடற்கரைகளாக கருதப்படுகின்றன.

குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர், டாமன் மற்றும் டையூவில் உள்ள கோக்லா, கர்நாடகாவில் உள்ள காசர்கோட் மற்றும் பதுபித்ரி, கேரளாவை சேர்ந்த கப்பாட், ஆந்திராவின் ருஷிகொண்டா, ஒடிசா மாநிலத்தின் கோல்டன் பீச் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபரை சேர்ந்த ராதாநகர் கடற்கரை ஆகிய எட்டு கடற்கரைகள் இந்த நீலக்கொடி லேபிளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

1986 முதல் 100 நாடுகளில் கொண்டாடப்படும் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் நடத்திய வீடியோ கான்பரன்ஸ் நிகழ்வில் இந்த பட்டியலை அறிவித்தது. சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு சுயாதீனமான தேசிய நடுவர் மன்றத்தால் இந்த பரிந்துரைகள் செய்யப்படுகின்றன.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் காரணமாக இந்த நிகழ்வில் நேரில் கலந்து கொள்ள முடியாத மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வீடியோ செய்தி மூலம் பேசினார். “ நாடு முழுவதும் கடற்கரைகளை சுத்தம் செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. சுத்தமான கடற்கரைகள் கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு சான்றாகும். கடல் குப்பை மற்றும் எண்ணெய் கசிவு பிரச்னை நீர்வாழ் உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது, எனவே கடலோரப் பகுதிகளின் நிலையான வளர்ச்சிக்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் செயலாளர் ஆர்.பி.குப்தா, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பாக வைத்திருக்க கடற்கரைகளை சுத்தம் செய்து நல்ல தரமாக பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் மேலும் 100 கடற்கரைகள் சுத்தம் செய்யப்படும்”என்றும் கூறினார்.

உலக வங்கியின், இந்திய இயக்குனர் ஜுனைத் கான் பேசுகையில் கடற்கரைகளை சுத்தம் செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளைப் பாராட்டினார், மேலும் “நிலையான கடலோர மண்டல நிர்வாகத்திற்கான சிறந்த உத்திகளைக் கொண்ட இந்தியா, இந்த பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக செயல்படும்”என்று கூறினார்.

பீம்ஸ் திட்டத்தின் நோக்கம் கடலோர நீரில் மாசுபடுவதைக் குறைத்தல், கடற்கரை பகுதிகளின் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல், கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாத்தல் ஆகியவை ஆகும். கடற்கரைப் பயணிகளின் தூய்மை, சுகாதாரம் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க பாதுகாப்பான கடலோர சூழலை உருவாக்க இத்திட்டம் உதவிசெய்கிறது. இயற்கையுடன் முழுமையான இணைந்து கடற்கரை பொழுதுபோக்குகளை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் இலட்சியமாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com