மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கும் அரண் என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரியான பிரவின் கஸ்வான் தனது டிவிட்டர் பக்கத்தில், ”மரங்களின் மகத்துவத்தை 40 விநாடிகளில் தெரிந்துகொள்ளலாம்” என்றுக்கூறி வீடியோவை பகிந்துள்ளார்.
https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FParveenKaswan%2Fstatus%2F1289394981858287621&widget=Tweet
அந்த வீடியோவில் ”ஒரு ட்ரேயில் வெறும் மண்ணும், மற்றொரு ட்ரேயில் செடிகளும் உள்ளன. இரண்டின் மீதும் நீர் ஊற்றும்போது செடி இல்லாத வெறும் மண்ணாக இருக்கும் ட்ரேயிலிருந்து மண் அரிப்பு ஏற்பட்டு கருமையான நிறத்தில் மண் நீருடன் வெளியேறுகிறது. ஆனால், செடிகள் உள்ள ட்ரேயில் நீர், மண் எதுவும் வெளியேறாமல் இருப்பதை பார்க்கும்போதே மரங்களை காக்கவேண்டும் என்ற சிந்தனை நம்முள் உதித்து விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண்ணரிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.