மணிப்பூர்-நாகாலாந்து காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டரில் நீர் எடுக்கும் வைரல் வீடியோ

மணிப்பூர்-நாகாலாந்து காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டரில் நீர் எடுக்கும் வைரல் வீடியோ
மணிப்பூர்-நாகாலாந்து காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டரில் நீர் எடுக்கும் வைரல் வீடியோ

மணிப்பூர்-நாகாலாந்து எல்லையில் டுகோ பள்ளத்தாக்கில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலமாக ஒரு நீர்நிலையிலிருந்து தண்ணீர் எடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிப்பூர்-நாகாலாந்து எல்லையில் உள்ள பிரபலமான மலையேற்ற இடமான டுகோ பள்ளத்தாக்கில் ஒருவாரத்திற்கும் மேலாக பெரும் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த தீயை அணைக்க மத்திய, மாநில அரசுகளும், பேரிடர் மீட்புப்படையும் பெரும் முயற்சி செய்துவருகிறது.

இந்த சூழலில் இப்பணியில் தற்போது இந்திய விமானப்படையும் இணைந்துள்ளது. அதன் ஒரு முயற்சியாக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலமாக  நாகலாந்திலுள்ள ஒரு நீர்நிலையிலிருந்து பெரிய வாளி மூலமாக நீர் எடுத்து காட்டுத்தீயில் கொட்டப்படுகிறது. இந்த ராட்சச வாளியின் கொள்திறன் சுமார் 3500 லிட்டர் ஆகும்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com