சுற்றுச்சூழல்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 30 ஆயிரம் களப்பணியாளர்கள்: விஜயபாஸ்கர்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 30 ஆயிரம் களப்பணியாளர்கள்: விஜயபாஸ்கர்
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் களப்பணியாளர்கள் செயல்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 90 இடங்களில் எலிசா சோதனை மையங்கள் இருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஆலங்குடி அரசு பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியினையும் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.