வெள்ளரி, தக்காளி மற்றும் சில காய்கறிகளில் உள்ள புரதம், அல்சைமர் எனும் மறதி நோய்க்கு வழிவகுக்கும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
வயது மூப்பின் காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் அல்சைமர் எனும் மறதி நோய் உருவாகிறது. இந்த நோயை தடுக்கவும், உடல் ஆரோக்கியத்துக்காகவும் அதிக காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் மறதிநோய் எனப்படும் அல்சைமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.
ஆனால், தற்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, சோயா ஒரு சில தானியங்கள், சில பால் பொருட்கள் உள்ளிட்டவற்றில் உள்ள அதிக புரதம் மறதி நோயை உண்டாக்குவதாக ஓர் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புரதம் அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளுவதால் உடலில் உள்ள லெக்டினை பாதிக்கின்றன. இதனால், செரிமான பிரச்சனைகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.