அக்டோபர் 5ஆம் தேதி தேசிய டால்பின்கள் தினம் - மத்திய சுற்றுச்சூழல்துறை அறிவிப்பு

அக்டோபர் 5ஆம் தேதி தேசிய டால்பின்கள் தினம் - மத்திய சுற்றுச்சூழல்துறை அறிவிப்பு
அக்டோபர் 5ஆம் தேதி தேசிய டால்பின்கள் தினம் - மத்திய சுற்றுச்சூழல்துறை அறிவிப்பு

நாய்களை போன்று மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகக் கூடிய மிகச்சில விலங்குகளில் டால்பின்களும் ஒன்று. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் தேதி தேசிய டால்பின்கள் தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

அழிந்துவரும் டால்பின் இனங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 3 ஆயிரத்து 700 டால்பின்கள் மட்டுமே உள்ளதாக மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இவற்றை காப்பதற்காக ’புராஜக்ட் டால்பின்’ என்ற திட்டத்தையும் 2 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com