பட்ஜெட் 2021: காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ரூ.2,217 கோடி!

பட்ஜெட் 2021: காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ரூ.2,217 கோடி!

பட்ஜெட் 2021: காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ரூ.2,217 கோடி!
Published on

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த தசாப்தத்தின் முதல் பட்ஜெட், டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்படும் முதல் பட்ஜெட் உள்ளிட்ட சிறப்புகளைப் பெற்ற இந்த பட்ஜெட்டில் சுற்றுச்சூழலை காக்க வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள்:

சுற்றுச்சூழல்:

> நீர்நிலைகளை பராமரிக்கக்கூடிய ஜல்ஜீவன் திட்டம், நகர்ப்புறங்களிலும் நீட்டிக்கப்படும்.

> காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக 2,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு

> காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன. இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம்.

எரிசக்தி துறை:

> பசுமை எரிசக்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் ஒன்று நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

> 139 ஜிகாவாட் அளவுக்கான மின் உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

> உஜ்வாலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு-காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com