5 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டுள்ளதாக ட்விட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார் நடிகர் விவேக்.
இயற்கையை பாதுக்காக்க வேண்டும். சுற்றுச்சூழலை காக்க வேண்டும் என பல வழிகளில் தன்னால் முயன்ற அளவு சேவையை செய்து வருகிறார் நடிகர் விவேக்.அதன் தொடர்சியாக இன்று புதுவையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார்.அப்போது அவர் அங்கே 5 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை பற்றியும் விவேகானந்தர் பற்றியும் சிறப்புரை ஆற்றினார். அந்தப் பேச்சை மாணவர்கள் பெரிதும் விரும்பி வரவேற்றனர் என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.