\
"சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை அவசியம்" - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

"சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை அவசியம்" - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

"சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை அவசியம்" - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
Published on: 

தமிழ்நாட்டில் தொழில்துறையினருக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில், பொதுமக்கள் மற்றும் இளையதலைமுறையினரின் பங்களிப்பை அதிகரித்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும் தமிழ்நாட்டில் வனப்பரப்பை 33 சதவிகிதமாக உயர்த்துவதற்கு, நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com