“சார் நீங்க குப்பைய ரோட்லயே போட்ருக்கீங்க”... மிரண்டு போன இளைஞர்கள்!

“சார் நீங்க குப்பைய ரோட்லயே போட்ருக்கீங்க”... மிரண்டு போன இளைஞர்கள்!

“சார் நீங்க குப்பைய ரோட்லயே போட்ருக்கீங்க”... மிரண்டு போன இளைஞர்கள்!
Published on

அடுத்தமுறை சாலையில் குப்பையைப் போடுவதற்கு முன்பு பலமுறை சிந்திக்கவேண்டும். அப்படி நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. அதாவது, கர்நாடகாவில் கடந்த வெள்ளிக்கிழமை சாலையில் பீட்சா சாப்பிட்டுவிட்டு குப்பையை வீசிய இளைஞர்கள், அதை திரும்ப எடுக்க மடகேரியிலிருந்து 80 கிமீ பயணம் செய்துள்ளனர். இல்லை செய்ய வைக்கப்பட்டனர். 

குடகுமலை சுற்றுலாப்பகுதியின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பற்றி குடகு சுற்றுலா கழகத்தின் பொதுச் செயலாளர் மாதேத்ரா திம்மையா பெங்களூரு மிரருக்குப் பேட்டிக் கொடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ’’கடகடாலு கிராம பஞ்சாயத்தின் உதவியுடன் வாகனப் பயணிகள் எறியும் குப்பைகளை சுத்தம்செய்து வருகிறோம். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.15 மணியளவில் நான் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சுற்றுலாப் பகுதியில் குப்பைகளை போடவேண்டாம் எனக் குறிப்பிட்ட இடத்தில் பீட்சா கவர்கள் சாலையில் கிடப்பதைப் பார்த்தேன். இதைப் பார்த்ததும் எங்கள் முயற்சிகள் எல்லாம் வீணாகியதாக உணர்ந்தேன். எனவே அந்த கவரைத் திறந்துப் பார்க்கவேண்டும் என முடிவுசெய்தேன். அதிர்ஷ்டவசமாக அந்த கவரில் பில்லும், அந்த நபரின் எண்ணும் இருந்தது. உடனே அந்த எண்ணுக்கு அழைத்து அவர்களை வந்து குப்பையை அப்புறப்படுத்துமாறு கூறினேன்.

ஆனால் அவர்கள் நீண்டதூரம் சென்றுவிட்டதாகவும், தவறுக்கு வருந்துவதாகவும் கூறி மன்னிப்புக் கேட்டார்கள். எனவே நான் உள்ளூர் காவல் ஆய்வாளரின் உதவியை நாடினேன். அவரும் அந்த இளைஞரைத் தொடர்புகொண்டார். மேலும், அந்த எண்ணை சமூக ஊடங்களில் பகிர்ந்தேன். பலரும் அந்த எண்ணுக்கு அழைத்து குப்பையை அப்புறப்படுத்துமாறு கேட்டிருக்கின்றனர். அதனால் அந்த இளைஞருக்கு தர்மசங்கடம் ஏற்படவே, அவருடைய நண்பருடன் 3.45 மணியளவில் மடிக்கேரியிலிருந்து 80 கிமீ தூரம் பயணம் செய்து சம்பவ இடத்திற்கு வந்து குப்பையை சுத்தப்படுத்தினார். அவர்களை எச்சரிக்கும்விதமாக அவர்கள் பெயர் மற்றும் எண்ணை கவரில் எழுதி அதை சமூக ஊடகங்களில் பதிவிட்டேன்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com