பரவும் டெங்கு: விழிப்புடன் இருக்க சுகாதாத்துறை அறிவுறுத்தல்

பரவும் டெங்கு: விழிப்புடன் இருக்க சுகாதாத்துறை அறிவுறுத்தல்
பரவும் டெங்கு: விழிப்புடன் இருக்க சுகாதாத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவும் ஐந்து தாலுக்காக்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

பழனி, பொள்‌ளாச்சி, பவானி, மணப்பாறை, ஓசூர் ஆகி‌ய பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகம் இருப்பதை கண்டறிந்துள்ள சுகாதாரத்துறை அந்த பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பத்து மாவட்டங்களிலும் டெங்கு நோய் அதிக அளவில் பரவி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் கொசுக்களால் பரவும் நோய்களில் டெங்குவே அதிக அ‌ளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் டெங்கு நோய் பாதிக்கப்படுபவர்களில் பத்து பேரில் ஏழு பேர் தமிழகம் மற்றும் கேரளாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

கொசுக்களால் ஏற்படும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள கொசு எதிர்ப்பு ஸ்பிரே ‌அல்லது களிம்புகளை பயன்படுத்தும்படி மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். வீடுகளில் பழைய பெட்டிகள், டயர்கள், போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

இதனிடையே, மதுரை மாவட்டத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 200 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பி உள்ளதாக ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com