சைரன் ஒலியுடன் துரத்திய வாகனத்தை ஆக்ரோஷத்தோடு திரும்பி துரத்திய காட்டுயானை

சைரன் ஒலியுடன் துரத்திய வாகனத்தை ஆக்ரோஷத்தோடு திரும்பி துரத்திய காட்டுயானை

சைரன் ஒலியுடன் துரத்திய வாகனத்தை ஆக்ரோஷத்தோடு திரும்பி துரத்திய காட்டுயானை
Published on

வாகனத்தின் சைரன் ஒலியைக் கேட்டு ஆத்திரமடைந்த காட்டுயானை வாகனத்தை துரத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள காட்டுயானை வாகனத்தை துரத்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் சாலையில் செல்லும் காட்டு யானையை சைரன் ஒலி எழுப்பியபடி விரட்டிச்சென்ற வாகனத்தை ஆத்திரமடைந்த காட்டுயானை ஆக்ரோஷத்துடன் திரும்பி வாகனத்தை நோக்கி வேகமாக ஓடிவருகிறது. யானை வருவதைக் கண்ட வாகன ஓட்டி வாகனத்தை பின்னோக்கி வேகமாக செலுத்துகிறார்.

இந்த காட்சியை வாகனத்தில் உள்ள நபர் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது இந்த வீடியோ கேரளாவில் எடுத்ததாகவும், அங்கு நடைபெற்ற சம்பவம் என வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது இந்த காட்சி சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com