நூறாண்டுகளில் இல்லாத அளவு உருகும் பனி அடுக்குகள்! உலகை எச்சரிக்கும் பருவநிலை மாற்றம்

நூறாண்டுகளில் இல்லாத அளவு உருகும் பனி அடுக்குகள்! உலகை எச்சரிக்கும் பருவநிலை மாற்றம்
நூறாண்டுகளில் இல்லாத அளவு உருகும் பனி அடுக்குகள்! உலகை எச்சரிக்கும் பருவநிலை மாற்றம்

உலகம் முழுவதுமே ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால்  பனி அடுக்குகள் உருகி வருகின்றன. அதனால் ஒவ்வொரு நாளும் பூமியை சுற்றி அமைந்துள்ள கடல் நீரின் மட்டம் மெல்லமாக உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், கடந்த 2019 இல் மட்டுமே கிரீன்லாந்தில் உள்ள  பனி அடுக்குகள் நிமிடத்திற்கு ஒரு மில்லியன் டன் வேகத்தில் உருகி வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள். 

அதற்கு அத்தாட்சியாக கடந்த ஆண்டு முழுவதுக்குமான கிரீன்லாந்தின் செயற்கைக்கோள் படங்களின் தரவுகளை மேற்கோள் காட்டியுள்ளனர் விஞ்ஞானிகள்.

கடந்த ஆண்டு சுமார் 532 பில்லியன் டன் கணக்கிலான பனி அடுக்குகள் உறைந்து கடலில் கலந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த 2003 முதல் சேகரிக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் படங்களின் தகவல்களை கொண்டு ஆய்வு மேற்கொண்டதில் ஆண்டுதோறும் உருகுகின்ற பனி பாறையின் சராசரி அளவை விட 2019 இல் பனி பாறைகள் மற்றும் அடுக்குகள் உருகுதலின் வேகம் இரு மடங்கு உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு 255 பில்லியன் பனி மட்டுமே கிரீன்லாந்தில் உருகி வந்துள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளாக கிரீன்லாந்தில் பனி அடுக்குகள் வேகமாக உருகி வருவதாகவும்  விஞ்ஞானிகள் கண்டறிந்திருந்துள்ளனர். 

இருப்பினும் 2019 இல் நிகழ்ந்தவை கடந்த நூறாண்டுகளில் காணாத ஒரு நிகழ்வு எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 96 சதவிகித பனி பாறைகள் உருக ஆரம்பித்துள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர்.

கிரீன்லாந்து உள்ள பனி அடுக்குகள்  மற்றும்  பாறைகள் முழுவதுமாக உருகினால் கடல் மட்டம் ஆறு மீட்டர் வரை உயர வாய்ப்புகள்  உள்ளதாம். அனைத்தும் கையை மீறி சென்றுவிட்ட காரணத்தினால் பனிப்பாறை உருகும் வேகத்தை கூடுமான வரை குறைக்க கார்பன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் அடுத்து வரும் நூறு ஆண்டுகளை சிக்கலின்றி கடக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com