\
முடங்கிப்போன மலர்க்கண்காட்சி... பூத்துக் குலுங்கும் லில்லியம் மலர்கள்

முடங்கிப்போன மலர்க்கண்காட்சி... பூத்துக் குலுங்கும் லில்லியம் மலர்கள்

முடங்கிப்போன மலர்க்கண்காட்சி... பூத்துக் குலுங்கும் லில்லியம் மலர்கள்
Published on

முடங்கிப்போன மலர்க்கண்காட்சி... பூத்துக் குலுங்கும் லில்லியம் மலர்கள்

கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் லில்லியம் மலர்களின் வண்ணத்தால் கொடைக்கானல் பூஞ்சோலையாகக் காட்சி அளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரய்ண்ட் பூங்காவில், கோடை பருவ மலர்க்கண்காட்சிக்கு என பிரத்யேகமாக லில்லியம் வகை மலர்களைப் பூங்கா நிர்வாகத்தினர் வரவழைத்தனர். அதன் பின்னர் அதனைப் பனித்துளி கூடாரத்தில் வைத்துப் பராமரித்து வந்தனர். மலர்க்கண்காட்சி நேரத்தில், இந்த மலர்களைக் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொது முடக்கத்தால் மலர்க்கண்காட்சி நடைபெறாத சூழல் உருவாகியது.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான தொட்டிகளில் வைக்கப்பட்ட லில்லியம் செடிகள், தற்பொழுது வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. எதிர்வரும் வாரத்தில் மீதம் உள்ள மகரம், சிகப்பு, அடர் சிகப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களும் பூத்துக் குலுங்கும் என்றும், ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகள் இவற்றின் அழகைக் காணமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக, பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com