கர்ப்பிணிகள் கொழுப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மனநலம் பாதிப்பு
கர்ப்பிணிகள் அதிகமாக கொழுப்பு உணவுகள் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைக்கு மனநலம் பாதிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
பெண்களின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் என்பது மிகவும் அழகானது. அப்படிப்பட்ட காலத்தில் பெண்கள் உளவியல் ரீதியாக தங்களை அழகாக உணருவார்கள். கர்ப்ப காலங்கள் சத்தான, சீரான உணவுகளை சாப்பிட்டால் தான் குழந்தைகள் ஆரோக்கியமாக வயிற்றில் வளர ஏதுவாக இருக்கும்.
அமெரிக்காவின் ஆரிகன் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவிலான கொழுப்பு உனவுகளை சாப்பிட்டால், அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டதாக இருக்கும் என்று கண்டறிந்துள்ளனர். கொழுப்பு வளர்ச்சியடைந்து வரும் குழந்தையின் மூளையில் பதிப்பை உண்டாக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
65 கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 65 பேரை இரண்டு குழுக்களாகப் பிரித்து, ஒரு குழு பெண்களுக்கு அதிக கொழுப்பு உள்ள உணவுகளையும், மற்றொரு குழு பெண்களுக்கு சீரான உனவுகளையும் வழங்கினர். அனைவருக்கும் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை, பெண் குழந்தை பேதமில்லாமல், சீரான உணவு கொடுக்கப்பட்ட தாய்களின் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராக இருந்தது. ஆனால் அதிக கொழுப்பு சாப்பிட்ட தாய்மார்களின் குழந்தைகளின் மூளையிலுள்ள நியூரான் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்ப்பட்டிருந்தது. ஆகவே கர்ப்பிணிகள் கொழுப்பு அதிகம் கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.