சுற்றுச்சூழல்
கடலூர்: கெடிலம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் - தூர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்
கடலூர்: கெடிலம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் - தூர்நாற்றம் வீசுவதாக மக்கள் புகார்
கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு நீர் முற்றிலும் மாசுபட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நெல்லிக்குப்பம் பகுதியிலிருந்து வரும் கழிவுநீர், தடுப்பணையில் தேங்கியிருப்பதாக குற்றம்சாட்டும் பொதுமக்கள், கழிவுநீரால், தண்ணீர் நுரை படர்ந்து காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். தடுப்பணையில் தற்போது ஆகாயத்தாமரை படர்ந்து ஆறு இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு மாறியிருப்பதாகக் கூறுகின்றனர்.
மனிதக் கழிவுகளையும் ஆற்றில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுவதோடு நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதாகத் புகார் தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.