\
உசைன் போல்டை விட வேகமாக ஓடும் டைனோசரை அடையாளம் கண்டுள்ள விஞ்ஞானிகள்

உசைன் போல்டை விட வேகமாக ஓடும் டைனோசரை அடையாளம் கண்டுள்ள விஞ்ஞானிகள்

உசைன் போல்டை விட வேகமாக ஓடும் டைனோசரை அடையாளம் கண்டுள்ள விஞ்ஞானிகள்
Published on

உலகின் மின்னல் வேக மனிதன் என அனைவராலும் போற்றப்படும் உசைன் போல்டை காட்டிலும் வேகமாக ஓடக் கூடிய டைனோசரை அடையாளம் கண்டுள்ளனர் விஞ்ஞானிகள். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிவேகமாக ஓடும் இரண்டு டைனோசர் இனத்தை அடையாளம் கண்டுள்ளனர். 

மணிக்கு 28 மைல் வேகத்தில் இந்த டைனோசர்கள் நகரும் என அவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் அறிந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அதன் காலடி தடங்களை வைத்து கணக்கிட்டு சொல்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த இனத்தை சேர்ந்த டைனோசர்கள் மாமிச உண்ணியக இருக்கக்கூடும் என ஆய்வறிஞர்கள் தெரிவித்துள்ளனர். தனது இரையை வேட்டையாடும் நோக்கில் இவை வேகமாக நகர்ந்திருக்கலாம் என்பது அவர்களது கூற்று. குறிப்பாக டி-ரெக்ஸ் மற்றும் வெலாசிராப்டர் என்ற இரண்டு கால்களில் நடக்கக்கூடிய டைனோசராக அவை இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com