மணிக்கு 623 கி.மீ. வேகத்தில் பறந்து அசத்தும் ரோல்ஸ் ராய்ஸின் எலெக்ட்ரிக் விமானம்!

மணிக்கு 623 கி.மீ. வேகத்தில் பறந்து அசத்தும் ரோல்ஸ் ராய்ஸின் எலெக்ட்ரிக் விமானம்!
மணிக்கு 623 கி.மீ. வேகத்தில் பறந்து அசத்தும் ரோல்ஸ் ராய்ஸின் எலெக்ட்ரிக் விமானம்!

பிரிட்டிஷ் நாட்டின் ஆடம்பர ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், மணிக்கு 623 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடிய எலெக்ட்ரிக் விமானத்தை வடிவமைத்து அசத்தியுள்ளது. இதன் மூலம் தங்கள் விமானம் உலகின் அதிவேக எலக்ட்ரிக் வாகனமாக மாறி உள்ளது எனவும் தெரிவித்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ். 

Accelerating the Electrification of Flight என்ற திட்டத்தின் கீழ் Spirit of Innovation என்ற பெயர் கொண்ட இந்த விமானத்தை வடிவமைத்துள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.  அதோடு இந்த விமானத்தை பறக்க செய்ததன் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ள மூன்று உலக சாதனைகளை சர்வதேச வானூர்தி கூட்டமைப்பில் பதிவு செய்யும் நோக்கில் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது ரோல்ஸ் ராய்ஸ். 

202 நொடிகளில் 3000 மீட்டர் உயரத்தை எட்டியது, 3 கிலோ மீட்டருக்கு மேல் மணிக்கு 559.9 கி.மீ. வேகத்தில் சென்றது மற்றும் 15 கிலோ மீட்டருக்கு மேல் மணிக்கு 532.1  கி.மீ. வேகத்தில் சென்றது என மூன்று சாதனைகளுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானம் பறக்கும் போதும் ஏற்படும் கார்பன் வெளியேற்றம் பெருமளவில் குறையும் எனவும் ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com