சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரக்கன்றுகளை வளர்க்கும் முன்னாள் வருவாய் ஆய்வாளருக்கு பாராட்டு

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரக்கன்றுகளை வளர்க்கும் முன்னாள் வருவாய் ஆய்வாளருக்கு பாராட்டு
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் மரக்கன்றுகளை வளர்க்கும் முன்னாள் வருவாய் ஆய்வாளருக்கு பாராட்டு

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான காடுகளை அழித்து பயன்தரும் பலவகையான மரக்கன்றுகளை நட்டுவைத்த ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளரை நேரில் சென்று பாராட்டிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், அவருக்கு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்துள்ள பாச்சிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர் கருப்பையா. இவர் தனது 8 ஏக்கர் நிலத்தில் விளைநிலத்திற்கு விவசாயத்திற்கும் கேடு விளைவிக்கும் தைலம் மரங்களை வளர்த்து வந்தார்.

இதனிடையே தைலமரங்களால் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் வகையில், விவசாயிகள் தாமாக முன்வந்து தைல மரங்களை அகற்றிவிட்டு பலவகை மரக்கன்றுகள் நட வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஏற்ற கருப்பையா தனது நிலத்தில் முதற்கட்டமாக 4 ஏக்கர் தைல மரக்காடுகளை அழித்து விட்டு அதில் தேக்கு, வேங்கை, ரோஸ்உட்,, செஞ்சந்தனம் உள்ளிட்ட மண்ணுக்கும் மக்களுக்கும் பயன் தரக்கூடிய பல வகையான மரக் கன்றுகளை நட்டுவைத்தார்

இதனை அறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கருப்பையாவின் தோட்டத்திற்குச் சென்று அவருக்கு பரிசுத் தொகை வழங்கி சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு அந்த தொகையில் கூடுதலாக மரக்கன்றுகளை வாங்கி தனது நினைவாக அங்கு நடவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதேபோல் மற்ற விவசாயிகளும் தங்கள் தோட்டத்தில் தைல மரங்கள் இருந்தால் அதனை அழித்து விட்டு சுற்றுச்சூழலுக்கும் மண்ணுக்கும் பலன் தரும் பல வகையான நாட்டு மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com