புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் எரிவாயு எடுப்பதற்கான சர்வதேச அழைப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எரிவாயு எடுக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கருக்காய்க்குறிச்சி வடத்தெரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆழ்துளை எரிவாயு கிணற்றில், எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அழைப்பாணை விடுத்துள்ளது. இதற்கு இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.