குவியும் நோயாளிகள்: ஒரே படுக்கையில் இருவர்.. அரசு மருத்துவமனையின் அவலம்!

குவியும் நோயாளிகள்: ஒரே படுக்கையில் இருவர்.. அரசு மருத்துவமனையின் அவலம்!

குவியும் நோயாளிகள்: ஒரே படுக்கையில் இருவர்.. அரசு மருத்துவமனையின் அவலம்!
Published on

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குவியும் நோயாளிகள் ஒரு படுக்கையில் 2 பேர் அனுமதிப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்‌.

தமிழகம் முழுவதும டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் என மக்கள் பல்வேறு காய்ச்சல் நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். டெங்கு நோயின் தாக்குதல் கடுமையாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 20க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் பல கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் காரணமாக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 500க்கு மேற்பட்ட நோயாளிகள் வருகிறார்கள். குழந்தைகள் வார்டில் கூடுதலான படுக்கை வசதியில்லாததால் ஒரே பெட்டில் 2 குழந்தைகள் படுக்க வைக்கப்பட்டு உள்ளனர். பல குழந்தைகள் தரையில் படுத்து உள்ளன. பெட் இல்லாதவர்களுக்கு பாய் கொடுப்பது வழக்கம். ஆனால் இங்கு பாய் கொடுக்காமல் குழந்தைகள் தரையில் படுக்க வைக்கப்பட்டு உள்ளனர். எனவே கூடுதலான படுக்கை வசதி செய்து தர வேண்டும் என்று நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவுகளில் இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கையைவிட அதிகமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் தேவைக்காக மற்ற பிரிவுகளில் இருந்து படுக்கைகளை கொண்டுவந்து போட்டுள்ளோம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 1288 படுக்கைகள் உள்ளன. இவற்றில் கணிசமான படுக்கைகள் காய்ச்சல் நோயாளிகளுக்காக தற்போது ஒதுக்கப்பட்டு உள்ளன. இதேபோல அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவசர காலத்தில் மக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள் செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. தற்போது மழை பெய்வதால் காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. இதை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த வகையிலும் நோயாளிகள் பாதிக்கப்பட கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com