நீலகிரி: ஒரு யானை குட்டிக்கு பாலூட்டும் இரண்டு பெண் யானைகள் - அரிய காட்சி

நீலகிரி: ஒரு யானை குட்டிக்கு பாலூட்டும் இரண்டு பெண் யானைகள் - அரிய காட்சி

நீலகிரி: ஒரு யானை குட்டிக்கு பாலூட்டும் இரண்டு பெண் யானைகள் - அரிய காட்சி

யானை குட்டி ஒன்று, இரண்டு பெண் யானைகளிடம் பால் குடிக்கும் அரிய நிகழ்வு முதுமலை வனப்பகுதியில் நிகழ்ந்திருக்கிறது.

ஊரடங்கு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து இருக்கிறது. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி சாலை வழியாக போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதை அதிக அளவில் காணமுடிகிறது.

அவ்வாறு இரண்டு யானை குட்டிகளுடன் இரண்டு பெண் யானைகள் சாலையில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது அந்தக் கூட்டத்தில், பிறந்து ஒருசில வாரங்களே ஆன யானை குட்டி ஒன்று முதலில் தாய் யானையிடம் பால் குடித்து விட்டு, பின்னர் அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு பெண் யானையிடம் சென்று பால் குடிக்க தொடங்கியது.

அந்தப் பெண் யானையும் சற்றும் எதிர்க்காமல்  யானை குட்டிக்கு பால் கொடுத்தது. பொதுவாக யானைகள் கூட்டத்தில் தாய் யானைகள் இருந்தாலும் குட்டிகளை வழி நடத்தக்கூடிய பொறுப்பு அதில் உள்ள மூத்த பெண் யானைக்குதான் உள்ளது.  யானை குட்டிக்கு பால் கொடுத்து கவனித்து கொள்வதிலும் மூத்த பெண் யானைக்கு பங்கு உள்ளது என்பதை இந்த காட்சி மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடிந்தது.

இதுகுறித்து யானைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, யானை கூட்டங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் இந்த காட்சிகளை நம்மால் எளிதாக பார்க்க முடியாது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com