மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 62 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு

தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியான மன்னார் வளைகுடாவில் புதியதாக 62 கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் தொலைவில் மன்னார் வளைகுடா பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்தப் பகுதியில் ஏற்கெனவே ‌4 ஆயிரத்து 223 கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்தப்பகுதிகளில் விரிவான ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. 

அந்த ஆய்வை நடத்த தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கடலுக்கு அடியில் கணக்கெடுப்பு நடத்தினர். ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள் உள்ளிட்ட‌வைகள் வாழ்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com