'தமிழகத்தில் காப்புக்காடுகள் அருகே குவாரிகள் அமைக்கப்படாது' - அமைச்சர் மெய்யநாதன் உறுதி

'தமிழகத்தில் காப்புக்காடுகள் அருகே குவாரிகள் அமைக்கப்படாது' - அமைச்சர் மெய்யநாதன் உறுதி
'தமிழகத்தில் காப்புக்காடுகள் அருகே குவாரிகள் அமைக்கப்படாது' - அமைச்சர் மெய்யநாதன் உறுதி

தமிழகத்தில் காப்புக் காடுகள், பறவை சரணாலயம் அருகில் குவாரிகள் அமைக்கப்படாது என்றும் ஏற்கெனவே குவாரிகள் இருந்தாலும் அதுவும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்தார்.

சென்னை தொழில் வர்த்தக சபை சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சென்னை பெருநகரை மாசுபாடு இல்லாத நகராக உருவாக்குவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், ''இந்த கருத்தரங்கு செய்ய சொல்வதை தமிழக அரசு ஏற்கனவே தொடங்கி உள்ளது. தமிழக காலநிலை மாற்ற இயக்கம் என்பதை தமிழக அரசு தொடங்கியுள்ளது‌. இதற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கடற்கரை பகுதிகளில் 500 கிலோமீட்டர் தேர்வு செய்து பனைமரங்கள் நடவு, பசுமை பள்ளிகள், பசுமை கோயில்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளது. கோயம்பேடு கார்பன் மாசு இல்லாத இடமாக மாற்றப்படும்.

பசுமை பரப்பை அதிகரிக்க பசுமை தமிழகம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக நீதியை உலகிற்கு எடுத்து கூறும் இடமாக தமிழகம் இருப்பது போல் சுற்றுச்சூழலியலை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலும் தமிழகம் உள்ளது. காப்புக்காடு, பறவை சரணாலயம் அருகில் குவாரிகள் அமைக்கப்படாது. ஏற்கெனவே இருந்தாலும் அதுவும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்வர் இயற்கையை பாதுக்கக்கும் அரணாக இருக்கிறார்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை என்று அமைச்சரவைக்கு பெயர் மாற்றம் செய்ததில் தொடங்கி தமிழக முதல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1,30,000 சதுர கிலோ மீட்டர். இதில் 42 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கு மேல் வனப்பரப்பு இருக்க வேண்டும். ஆனால் 31,199 சதுர கிலோமீட்டர் தான் வனப்பரப்பு இப்போது உள்ளது . சட்டப்படி 33 சதவீதம் வனப் பரப்பு இருக்க வேண்டும். ஆகையால் 9% வனப்பரப்பை அதிகப்படுத்த வேண்டிய சூழலில் உள்ளோம். அடுத்த 10 ஆண்டுளில் வனப்பரப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஆண்டுதோறும் 10 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். ஏன் பசுமை பரப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் மரங்கள் தான் கார்பனை எடுத்துக்கொண்டு ஆக்சிசனை வழங்கக் கூடியது. இயற்கை, தன்னை தானே செய்து கொள்ளும். கார்பன் மாசு உற்பத்தியில் மின் திட்டங்கள்தான் உள்ளது. ஆனால் மின்சாரம் தேவை இருக்கிறது. இதனால் தான் தமிழக அரசு சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இருந்தாலும் முழுமையாக அந்த வகையில் முழுவதும் பெற முடியாத நிலை உள்ளது. ஆகவே மின்சார பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும். ஒவ்வொருவரும் நினைத்தால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட் மின்சாரம் சேமிக்கலாம்.

உங்கள் வீடுகளில் உள்ள மின்சாதன பொருள்களை தேவை முடிந்ததும் நிறுத்தி வைக்கவும். இதன் மூலம் தமிழகத்தில் ஒரு நாளைக்கு 1000 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்க முடியும். சென்னையில் ஒரு நாள் மின்சார தேவை 3000 மெகாவாட். ஆனால் இதே அளவுதான் கேரளா மாநிலத்தின் ஒரு நாள் மின்சார தேவையான உள்ளது‌.

கார்பன் மாசுபாட்டை குறைக்க வாகன போக்குவரத்தையும் குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும்.
மகளிர் இலவச பேருந்து பயணத்தைதால் தமிழகத்தில் பொது போக்குவரத்து பயன்படு அதிகரித்துள்ளது. இது மாசுபாட்டை குறைக்க உதவும். நான் அமைச்சராக இருந்தாலும் அதிக வாகனங்களில் அணிவித்து செல்வது இல்லை. தனி வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். இயற்கை பேரிடர் ஏற்படும் போது நாம் மட்டுமல்ல எந்த தவறும் செய்யாத பறவைகள், விலங்குகள், பல உயிர்கள் பாதிக்கப்படும். ஆகவே கால நிலை மாற்றத்தை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்'' என்றார்.

தவற விடாதீர்: வனப்பகுதி எல்லையோர கல்குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து - தமிழக அரசு உத்தரவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com