உள்ளூர் பழங்கள் – உடலுக்கும் நல்லது, பர்சுக்கும் நல்லது!

உள்ளூர் பழங்கள் – உடலுக்கும் நல்லது, பர்சுக்கும் நல்லது!
உள்ளூர் பழங்கள் – உடலுக்கும் நல்லது, பர்சுக்கும் நல்லது!

தொடர் நோய்த்தொற்றுகள் மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் மீதான விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது. இனிவரும் காலங்களில் உருவாகும் நோய்களை சமாளிக்க நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றல்தான் உதவும் என்று உலகின் அத்தனை மருத்துவ வல்லுநர்களும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர். உடல் ஆரோக்கியத்தின் முக்கிய பங்களிப்பு என்பது பழங்களின் மூலமாகவே கிடைக்கிறது, ஆனால் பழங்களுக்கான செலவுதான் நினைக்கும்போதே கண்ணைக்கட்டக்கூடியதாக உள்ளது என்கின்றனர் சாமானியர்கள்.

பழங்களுக்கு பெரிய அளவில் செலவே செய்ய வேண்டாம், உங்கள் உள்ளூர் பகுதிகளில் கிடைக்கும் பழங்களை சாப்பிட்டாலே போதும், ஆரோக்கியமும் நிச்சயம், செலவும் குறைவு என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

பருவநிலை பழங்கள் எனப்படும் சீசசனல் புரூட்ஸ் எல்லா ஊர்களிலும், எல்லா காலங்களிலும் விலை குறைவாக கிடைக்கக்கூடியது. குறிப்பாக கோடை சீசனில் மாதுளை, மாம்பழம், பலாப்பழ சீசன் அதனால் அவை விலை குறைவாக கிடைக்கிறது. அதுபோல கொய்யா, சப்போட்டா, சீதாபழம், பப்பாளி, ஆரஞ்சு, எலுமிச்சை, நார்த்தைபழம், இலந்தை, நாவல், கொடுக்காப்புளி, ஈச்சை போல அந்தந்த பகுதிகளில் விளையும் பழங்கள், அந்த சீசனில் விலை குறைவாக கிடைக்கும். அதுபோன்ற பழங்களை தேர்ந்தெடுத்து உண்பதே உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதுடன், செலவையும் மிச்சப்படுத்தும்.

எல்லா சீசனிலும் கிடைக்கும் வாழைப்பழம் நமது உணவுப்பொக்கிஷம் என்றே சொல்லலாம். ஏனென்றால் வாழையில் மொந்தன், பூவன், பச்சை, பச்சைநாடன், கற்பூரவல்லி என பலவகையானவை உள்ளன. இவற்றை சுழற்சி முறையில் சாப்பிட்டுவந்தாலே உடல் ஆரோக்கியமும் நிச்சயம், விலையும் கச்சிதமாகவே இருக்கும். நமது பகுதியில் கிடைக்காத பழங்களும், சீசன் இல்லாத பழங்களும்தான் விலையும் அதிகம், ஆரோக்கியத்திற்கும் உகந்ததில்லை என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com