தமிழக அரசிடமே ஓஎன்ஜிசி சுற்றுசூழல் அனுமதி கேட்பது அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்
” ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூரில் ஆய்வுக்கிணறுகள் அமைக்க தமிழக அரசிடமே சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வுக்கிணறுகளை அமைக்க தமிழக அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதிக்கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்திருந்த நிலையில், திருமாவளவன் எம்.பி இன்று, தனது ட்விட்டர் பக்கத்தில், ”அண்மையில் தமிழக முதல்வர் 'தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாதென பிரதமருக்கு மடல் எழுதினார். ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூரில் ஆய்வுக்கிணறுகள் அமைக்க தமிழ்நாடுஅரசிடமே சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் தமிழகமுதல்வர் 'தமிழ்நாட்டில் #ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்
கூடாதென பிரதமருக்கு மடல் எழுதினார். ஆனால்,ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூரில் ஆய்வுக்கிணறுகள் அமைக்க தமிழ்நாடுஅரசிடமே சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். pic.twitter.com/cAJIjof1ip
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 17, 2021

இதற்கு முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை திரும்பப்பெறக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதினார். கடிதத்தில், “காவிரி டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தின் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும். பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏலம் விட்டாலும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. விவசாய பெருங்குடி மக்களின் நலனையும், காவிரி படுகை வளத்தையும் கண்ணை இமை காப்பது போது தமிழக அரசு காக்கும். அதனால் எதிர்காலத்தில் தமிழகத்தின் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஏலத்துக்காக அறிவிக்கக்கூடாது” என தெரிவித்திருக்கிறார்.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள கருக்காய்குறிச்சி வடத்தெருவில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சர்வதேச ஏலத்திற்கு அழைப்பானை விடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.