ஜகி வாசுதேவ் பிறந்தநாள்: தமிழகம் முழுவதும் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக ஈஷா தகவல்

ஜகி வாசுதேவ் பிறந்தநாள்: தமிழகம் முழுவதும் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக ஈஷா தகவல்
ஜகி வாசுதேவ் பிறந்தநாள்: தமிழகம் முழுவதும் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டதாக ஈஷா தகவல்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜகி வாசுதேவின் பிறந்த நாளையொட்டி இன்று (செப்.3) தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 485 ஏக்கர் நிலப்பரப்பில் 1.23 லட்சம் மரக்கன்றுகளை நடப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "நதிகள் மீட்பு இயக்கம், காவேரி கூக்குரல் இயக்கம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 3-ஆம் தேதியை 'நதிகளுக்கு புத்துயிரூட்டும் தின'மாக அனுசரித்து விவசாயிகள் மரக்கன்றுகளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், விருது நகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் நட்டனர்.

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுடன் இணைந்து, செப்டம்பர் 2,3 ஆம் தேதிகளில் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடுவு செய்யப்பட்டன. விவசாயிகளுக்கு பணப் பயன் தரக்கூடிய, மண்ணுக்கேற்ற டிம்பர் மரங்களான தேக்கு, வேங்கை, சந்தனம், செம்மரம், மலைவேம்பு, குமிழ் தேக்கு, கருமருது, மகாகனி போன்ற மரங்கள் நடவு செய்யப்பட்டன.

இதில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியாளர்கள் வழங்கினர். விவசாய நிலங்களில் மண்ணுக்கேற்ற மரங்களை காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப்பணியாளர்கள் பரிந்துரை செய்தனர்.

மரங்கள் மூலம் மண்ணின் வளம் மேம்பட்டு ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், ஜகி வாசுதேவின் பிறந்த நாளுக்கு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், திரைத்துறையினர் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்" என்று ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com