சுற்றுச்சூழல்
சர்வதேச கடலோர தூய்மை தினம்: கடற்பகுதியில் தூய்மைப்பணி
சர்வதேச கடலோர தூய்மை தினம்: கடற்பகுதியில் தூய்மைப்பணி
சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி, பாய்மரப் படகு சங்கத்தைச் சேர்ந்தவர்கள், கடலில் உள்ள குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாய்மரப்படகு சங்கத்தைச் சேர்ந்த 12 பேர், பாய்மரக் கப்பலில் சென்று கடலில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். தேங்காய் திட்டு துறைமுகம் பகுதியில் நடந்த இந்த தூய்மைப் பணியின் போது, நீரில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.