இந்தியாவின் முதல் 'வாட்டர் ப்ளஸ்' நகரம் என்ற அடையாளத்தை பெறுகிறது ம.பி.யின் இந்தூர்

இந்தியாவின் முதல் 'வாட்டர் ப்ளஸ்' நகரம் என்ற அடையாளத்தை பெறுகிறது ம.பி.யின் இந்தூர்
இந்தியாவின் முதல் 'வாட்டர் ப்ளஸ்' நகரம் என்ற அடையாளத்தை பெறுகிறது ம.பி.யின் இந்தூர்

இந்தியாவின் தூய்மையான நகரமாக இருக்கும் மத்திய பிரதேசத்தின் இந்தூர், தற்போது இந்தியாவின் முதல் 'தூய்மையான தண்ணீர்' (வாட்டர் ப்ளஸ்) கொண்ட நகரம் என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளது. '2021 ஸ்வட்ச் சர்வேக்‌ஷன்' என்ற திட்டத்தின் கீழ் இந்த அடையாளம் இந்தூருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தனது அந்தப் பதிவில், "#SwachhSurvekshan2021 வழிமுறையின்கீழ், 'ஸ்வட்ச் பாரத் மிஷன்'-னுடைய முதல் வாட்டர் ப்ளஸ் சான்றிதழை பெற்றதற்கு, இந்தூர் குடிமக்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். இந்திய மக்கள் அனைவருக்கும் தூய்மையான நீரை பராமரிப்பதற்கு எந்தளவுக்கு உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு தேவை என்பதற்கு இந்தூர் மக்கள் முன்மாதிரியாக மாறியுள்ளனர். இந்தூர் மக்களின் இந்த அர்ப்பணிப்பு, இனியும் தொடர வேண்டும். இதன்மூலம் மாநிலத்துக்கு அவர்கள் மேலும் பெருமை தேடித்தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாட்டர் ப்ளஸ் அடையாளம், நதி முதல் வடிவுகால் வரை தூய்மையாக பராமரிப்பதை குறிக்கும். இந்தூர் மாநகராட்சியின் ஆணையர் ப்ரதீபா பால் இதுபற்றி கூறுகையில், "மாநகராட்சி விதிகளின்படி கழிவுநீர் ஏதும் நதிகளிலோ, வடிகாலிலோ கலக்காமல் பார்த்துக்கொள்வோம். அதேபோல 30% சாக்கடை நீர், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்த வேண்டும். அப்படி மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் நீர், தோட்டங்களுக்கும் கட்டிட வேலைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பொது கழிவறைகள் அனைத்திலும் கழிவுநீர் அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதைத்தாண்டி கழிவு சேராமல் சுத்தமாக இருக்கும்படி கவனித்துக்கொள்வோம்.

வடிகால்களின் கரையில் வசிக்கும் மக்கள் வடிகால் பாதையில் உள்ள தங்கள் வீடுகளின் கழிவு வெளியேற்றங்கள், தங்கள் தனிப்பட்ட செலவில் மாநகராட்சி கழிவுநீருடன் இணைத்திவிட்டனர். நகரத்தில் 7000 பொது மற்றும் வீட்டு கழிவுநீர் வெளியேற்றங்கள், நகரின் ஆறுகள் கழிவுநீர் குழாய்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன" எனக்கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com