கூடலூர்: பூனைக் குட்டி என நினைத்து சிறுத்தை குட்டியை தூக்கி வந்த தேயிலை தொழிலாளர்கள்

கூடலூர்: பூனைக் குட்டி என நினைத்து சிறுத்தை குட்டியை தூக்கி வந்த தேயிலை தொழிலாளர்கள்
கூடலூர்: பூனைக் குட்டி என நினைத்து சிறுத்தை குட்டியை தூக்கி வந்த தேயிலை தொழிலாளர்கள்

கூடலூரில் தேயிலைத் தோட்டத்தில் கிடந்த சிறுத்தை குட்டியை பூனைக் குட்டி என நினைத்து அதனை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கையில் தூக்கி வந்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டி ஒன்று கிடந்துள்ளது. இதனை பூனைக் குட்டி என நினைத்த தொழிலாளர்கள் கையில் தூக்கி எடுத்து வந்துள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அது பூனைக் குட்டி இல்லை சிறுத்தை குட்டி என கூறியதை அடுத்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டியை மீட்டு ஏற்கெனவே அது கிடந்த அதே பகுதியில் விட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் தாய் சிறுத்தை இரை தேடுவதற்காக குட்டியை பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. தற்சமயம் குட்டியை அதே பகுதியில் விட்டுவிட்டு நான்கு வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். நிச்சயம் தாய் சிறுத்தை குட்டியை எடுத்து செல்லும் என நம்புகிறோம். அதுவரை வனத்துறையினர் இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: காலி மதுபாட்டில்களை கொடுத்தால் ரூ10 கொடுக்கப்படும் -நீலகிரியில் புதிய திட்டம் ; முழுதகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com