\
நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை?

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை?

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை?
Published on

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யா முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நாளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யா தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் மருத்துவ அதிகாரிகள் இந்த விவகாரம் வெளியாகும் முன்பு நடத்திய விசாரணையின் விவரங்களை, அவர்களிடமிருந்து காவல்துறையினர் பெற்றுள்ளனர். தொடர்ந்து உதித் சூர்யாவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் அதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதற்கிடையில் உதித் சூர்யாவின் முன்ஜாமீன் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞரிடம் விசாரணை அதிகாரி உஷா வழங்கியுள்ளார். உதித் சூர்யாவை கைது செய்ய பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com