சத்தியமங்கல வனப்பகுதியில் யானை தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு

சத்தியமங்கல வனப்பகுதியில் யானை தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு
சத்தியமங்கல வனப்பகுதியில் யானை தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானைத் தாக்கி வனக்காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காட்டு யானைத் தாக்கி வனக்காவலர் ஒருவர் உயிரிழந்தார். வனவிலங்கு கணக்கெடுப்பு பணியின்போது யானை தாக்கியதில் சதீஷ் என்ற வனக் காவலர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு காவலரான பொன்கணேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கெனவே நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஒரே வாரத்தில் 3 பேரை ஒரு யானை தாக்கிக் கொன்றது. அந்த யானையை பிடிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், சத்தியமங்கலத்திலுள்ள கல்லம்பாளையம் வனப்பகுதியில் காட்டுயானை தாக்கி வனக்காவலர் உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com