பசியிலிருக்கும் யானை பிளாஸ்டிக் சாப்பிடுகிறது - யார் காரணம்?

பசியிலிருக்கும் யானை பிளாஸ்டிக் சாப்பிடுகிறது - யார் காரணம்?
பசியிலிருக்கும் யானை பிளாஸ்டிக் சாப்பிடுகிறது - யார் காரணம்?

பூமியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தும் அளவிற்கு பிளாஸ்டிக்கின் கோரக்கரங்கள் வளர்ந்துள்ளது. நிலத்தை மட்டுமில்லாது கடல் வாழ் உயிர்களுக்கும் அச்சுறுத்தலை கொடுத்து வரும் நிலையில் தற்போது வன விலங்களையும் அந்த கோரக் கரங்கள் விட்டு வைக்கவில்லை.

கம்பீரமாகக் காடுகளில் வலம் வரும் யானைக்கு பிளாஸ்டிக்கின் விளைவுகளுக்கு குறித்து என்ன தெரியும்? ஆனால் பிளாஸ்டிக்கை உருவாக்கி அதைப் பயன்படுத்தும் நமக்குத் தெரியும் அல்லவா பிளாஸ்டிகின் விளைவுகள்? வனப் பகுதிகளுக்கு பிளாஸ்டிக் பொருள் தடை என்ற சட்டம் நடைமுறையிலிருந்தாலும் கூட மனிதர்கள் அதை மதிப்பதில்லை என்பதே நிதர்சனம்.

மலைப்பிரதேசங்களில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து வரும் வேளையில் மறுபக்கம் மலைப்பிரதேசங்களில் நிலம் மாசடைந்தும் வருகிறது. மலைப்பிரதேசங்களில் மது பாட்டில்கள் கிடைப்பதும், மக்காத பிளாஸ்டிக் கவர்கள் பரவிக் கிடைப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் அவற்றை எளிதாகக் கடந்துவிடுகிறோம், பிளாஸ்டிக்கைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், பசியுடன் இருக்கும் யானை தனது தும்பிக்கையால் பிளாஸ்டிக் துண்டு ஒன்றை எடுத்து வாயில் வைத்துச் சாப்பிட முயல்கிறது. பிரம்மாண்டமான விலங்கு ஒன்று பசியில் அங்கு கிடக்கும் பிளாஸ்டிக்கை தின்றால் என்னவாகும்? ஒவ்வொருவரும் அவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com