“தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்” - பீலா ராஜேஷ்

“தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்” - பீலா ராஜேஷ்

“தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளனர்” - பீலா ராஜேஷ்
Published on

தமிழகம் முழுவதும் 90, 412 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்புவோர் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். கொரோனா சோதனையில் ஒருமுறை நெகட்டிவ் என வந்தாலும் மீண்டும் பாசிட்டிவ் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இன்று மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மொத்தமாக 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2ஆம் நிலையில் தான் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 411 பேரின் உடல்நிலையும் சீராகவே உள்ளது. அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நோய் யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். அதனால் தகவல் வரும்போது வீடு வீடாகச் சென்று சோதிக்கிறோம். இதில் நிறைய பணியாளர்களைப் பயன்படுத்தி வருகிறோம். இது நோய்தான். அதை எளிதில் குணப்படுத்த முடியும். அதனால் யாரும் பயப்பட வேண்டாம். கொஞ்சம் விழிப்புணர்வு தேவை. அறிகுறி இருந்தால் மருத்துவமனையை அணுகுங்கள். சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். மிஞ்சிப்போனால் 20 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com