விலை கட்டுப்பாட்டுக்குள் புற்றுநோய் தடுப்பு மருந்துகள்

விலை கட்டுப்பாட்டுக்குள் புற்றுநோய் தடுப்பு மருந்துகள்

விலை கட்டுப்பாட்டுக்குள் புற்றுநோய் தடுப்பு மருந்துகள்
Published on

மத்திய அரசு 42 புற்றுநோய் தடுப்பு மருந்துகளை விலை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

இந்திய மருந்து விலை ஆணையம் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு விலையை நிர்ணயித்து வருகிறது. அத்துடன் அந்த மருந்து பொருட்களின் விலைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. இதுவரை 1000 அத்தியாவசிய மருந்துவகைகளுக்கு விலை கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அந்தவகையில் இந்த ஆணையம் தற்போது 42 புற்றுநோய் தடுப்பு மருந்துகளை விலை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருந்துக விலை ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “மருந்துகள் விலை கட்டுப்பாடு ஆணை 2013 இல் இருக்கும் விதி 19ன்படி 42 புற்றுநோய் தடுப்பு மருந்துகளை விலை கட்டுப்பாட்டை வர்த்தக சீரமைப்பு மூலம் செய்யவுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இந்த 42 மருந்துகளையும் விலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் மருந்துகளின் விலை 85 சதவிகிதம் குறையும் என மருந்தக விலை ஆணையம் கூறியுள்ளது. மேலும் இந்த மருந்துகளின் வர்த்தக வரம்பு 30 சதவிகிதமாக வகுக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி அமலுக்கு வரும் என மருந்தக ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 57 புற்றுநோய் தடுப்பு மருந்துகள் விலை கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com