பருவநிலை மாற்றத்தால் சென்னை கடலில் மூழ்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பருவநிலை மாற்றத்தால் சென்னை கடலில் மூழ்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
பருவநிலை மாற்றத்தால் சென்னை கடலில் மூழ்கும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பருவநிலை மாற்றம் காரணமாக பசிபிக் மற்றும் ஆசிய பிராந்தியத்தில் மோசமான பாதிப்புகள் ஏற்படப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் வெள்ள பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய மேம்பாட்டு வங்கி பருவநிலை மாற்றம் பற்றி நடத்திய ஆய்வில், சீனா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியாவில் அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. 
உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாட்டால் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள கடலோர பகுதிகளில் உள்ளவர்களில் 13 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
2005 மற்றும் 2050 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் கடலோரத்தில் இருக்கும் 136 பெரு நகரங்கள் கடலில் மூழ்கும். இவற்றில் 20 நகரங்கள் ஆசிய கண்டத்தில் உள்ளது. இவற்றில் கொல்கத்தா, மும்பை, சென்னை, சூரத் உள்ளிட்ட நகரங்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com