ஆழியார் சுற்றுலாப்பயணிகளிடம் பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் பறிமுதல் - வனத்துறை நடவடிக்கை

ஆழியார் சுற்றுலாப்பயணிகளிடம் பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் பறிமுதல் - வனத்துறை நடவடிக்கை
ஆழியார் சுற்றுலாப்பயணிகளிடம் பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் பறிமுதல் - வனத்துறை நடவடிக்கை

ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, டாப்சிலிப் ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. ஆழியார் அணை, வால்பாறை, டாப்சிலிப் செல்லும் சுற்றுலாப் பயணிகள் கொண்டுசெல்லும் உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் மதுபானங்களை வனப்பகுதிகள் கொண்டு சென்று சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே தூக்கி எறிவதால் வனப்பகுதியிலுள்ள மான், யானை, காட்டெருமை, கரடி, குரங்குகள் போன்ற வனவிலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடி வழியாக செல்லும் வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் மதுபாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை சோதனை சாவடியிலேயே பறிமுதல் செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக வனத்துறையினர் மஞ்சப்பை மற்றும் காகித கவர்களை வழங்கி வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் இன்று மட்டும் இதுவரை 20 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 25க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com